தங்கச்சி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்அந்தோனி தாசன்சந்தோஷ் நாராயணன்மேயாத மான்

Thangachi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அனபெல் பேய் வாரா…
அன்பில் குட்டி தாயா வாரா…
அனபெல் பேய் வாரா…
அன்பில் குட்டி தாயா வாரா…
அண்ணண் காச ஆட்டைய போட்டு…
பியூட்டி பார்லர் போயி வாரா…

ஆண் : மேக்கப் அள்ளி மொழுகு…
நம்ம தங்கச்சிதான் அழகு…
மேக்கப் அள்ளி மொழுகு…
நம்ம தங்கச்சிதான் அழகு…

ஆண் : அப்பன் கிட்ட வத்தி வைப்பா…
ஸ்கூட்டி தொட்டா கொட்டி வைப்பா…
அப்பன் கிட்ட வத்தி வைப்பா…
ஸ்கூட்டி தொட்டா கொட்டி வைப்பா…
சேனல நீ மாத்தி பாரு…
கழுத்து மேல கத்தி வைப்பா…

ஆண் : ஆங்கிரி பார்டு பொண்ணு…
வீர தங்கச்சிதான் கண்ணு…
ஆங்கிரி பார்டு பொண்ணு…
வீர தங்கச்சிதான் கண்ணு…

—BGM—

ஆண் : வேல சொன்னா கேட்கமாட்டா…
மனுஷனாவே மதிக்கமாட்டா…
வேல சொன்னா கேட்கமாட்டா…
மனுஷனாவே மதிக்கமாட்டா…
செய்யலைன்னா செத்தடினு…
போடா கூந்தலுனு போயிடுவா…

ஆண் : கழுவி கொட்டுனத உடுமா…
அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா…
கழுவி கொட்டுனத உடுமா…
அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா…

ஆண் : ரகசியம் சொல்லி வச்சா…
பக்குவமா மூடிடுவா…
எப் எம்ல ஏத்தி விட்டு…
எஸ்கேப் ஆயி ஓடிடுவா…
கோல பொடி மூஞ்சில கொட்டி…
சுத்தி சுத்தி ஆடிடுவா…

ஆண் : ஈடு இல்ல எவனும்…
அட தளபதிதான் வரணும்…
ஈடு இல்ல எவனும்…
எங்க தளபதிதான் வரணும்…

—BGM—

ஆண் : குப்புற நான் விழுந்துபுட்டா…
தூக்கி விட நெனச்சிருப்பா…
குப்புற நான் விழுந்துபுட்டா…
தூக்கி விட நெனச்சிருப்பா…
ரெண்டுத்துக்கும் நடுவுல அவ…
அரைமணி நேரம் சிரிச்சிருப்பா…

ஆண் : ஆஹா என்ன சிரிப்பு…
இது வாலு வச்ச பொறப்பு…
ஆஹா என்ன சிரிப்பு…
இது வாலு வச்ச பொறப்பு…

—BGM—

ஆண் : காதலிச்சா புடிச்சிடுவா…
காயம் பட்டா துடிச்சிடுவா…
காதலிச்சா புடிச்சிடுவா…
காயம் பட்டா துடிச்சிடுவா…
என்னை என்னி கண்ணீர் விட்டு…
ஒன்னும் இல்லனு நடிச்சிடுவா…

ஆண் : வேற என்ன வேணும்…
அவ வெள்ளை மனம் போதும்…
வேற என்ன வேணும்…
அவ வெள்ளை மனம் போதும்…

ஆண் : வலி அவ கொடுத்ததில்ல…
பசியில நான் படுத்ததில்ல…
வலி அவ கொடுத்ததில்ல…
பசியில நான் படுத்ததில்ல…
கணவனே வந்தாலும் அவ…
என்ன விட்டு கொடுத்ததில்ல…

ஆண் : நான்தான் அவ வேலு…
வம்பு பண்ணா அவன் காலி…
நான்தான் அவ வேலு…
வம்பு பண்ணா அவன் காலி…

ஆண் : அவ இல்லாம…
அவ இல்லாம நான் இல்ல…
நா இல்லாம அவளும் இல்ல…
அவ இல்லாம நான் இல்ல…
நா இல்லாம அவளும் இல்ல…
ஆனா இத என்னைக்குமே…
நாங்க வெளிய சொன்னதில்ல…

ஆண் : தொப்புள் கொடி கயிறு…
அவ மட்டும்தான் என் உயிரு…
தொப்புள் கொடி கயிறு…
அவ மட்டும்தான் என் உயிரு…

—BGM—

ஆண் : தங்கச்சி… தங்கச்சி… தங்கச்சி…


Notes : Thangachi Song Lyrics in Tamil. This Song from Meyaadha Maan (2017). Song Lyrics penned by Vivek. தங்கச்சி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading