ஒரு முறை பிறந்தேன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிஹரன் & சாதனா சர்கம்ஸ்ரீகாந்த் தேவாநெஞ்சிருக்கும் வரை

Orumurai Piranthen Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்…
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்…
மனதினில் உன்னை சுமப்பதினாலே…
மரணத்தைதாண்டி வாழ்ந்திருப்பேன்…

ஆண் : என் கண்ணில் உன்னை வைத்தே…
காட்சிகளை பார்ப்பேன்…
ஒரு நிமிடம் உன்னை மறக்க…
முயன்றதில்லை தோற்றேன்…

ஆண் : நீயே என் இதயமடி…
நீயே என் ஜீவனடி…

ஆண் : ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்…
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்…
மனதினில் உன்னை சுமப்பதினாலே…
மரணத்தைதாண்டி வாழ்ந்திருப்பேன்…

ஆண் : என் கண்ணில் உன்னை வைத்தே…
காட்சிகளை பார்ப்பேன்…
ஒரு நிமிடம் உன்னை மறக்க…
முயன்றதில்லை தோற்றேன்…

ஆண் : நீயே என் இதயமடி…
நீயே என் ஜீவனடி…

—BGM—

ஆண் : ஓஓ… உந்தன் நெற்றி மீதிலே…
துளி வேர்வை வரலாகுமா…
சின்ன தாக நீயும்தான் முகம் சுளித்தால்…
மனம் தாங்குமா…

ஆண் : உன் கண்ணிலே துளி நீரையும்…
நீ சிந்தவும் விடமாட்டேன்…
உன் நிழலையும் தரை மீதிலே…
நடமாடவும் விடமாட்டேன்…

பெண் : ஒரே உடல் ஒரே உயிர்…
ஒரே மனம்…
நினைக்கையில் இனிக்கிறதே…

ஆண் : நீயே என் இதயமடி…
நீயே என் ஜீவனடி…

—BGM—

பெண் : காற்று வீசும் மாலையில்…
கடற் கரையில் நடை போடணும்…
உன் மடிதான் பாய் மரம்…
படகேறி திசை மாறனும்…

பெண் : ஒளி வீசிடும் இரு கண்கள்தான்…
வழி காத்திடும் கலங்கரையா…
கரை சேரவே மனம் இல்லையே…
என தோன்றிதல் அது பிழையா…

ஆண் : நெஞ்சுக்குள்ளே உன்னை வைத்து…
பூட்டி விட்டு…
சாவியை தொலைத்து விட்டேன்…

பெண் : நீயே என் இதயமடா…
நீயே என் ஜீவனடா…

பெண் : ஒருமுறை பிறந்தேன் ஒருமுறை பிறந்தேன்…
உனக்கென உயிரையும் நான் கொடுப்பேன்…
மனதினில் உன்னை சுமப்பதினாலே…
மரணத்தை தாண்டி வாழ்ந்திருப்பேன்…

பெண் : என் கண்ணில் உன்னை வைத்தே…
காட்சிகளை பார்ப்பேன்…
ஒரு நிமிடம் உன்னை மறக்க…
முயன்றதில்லை தோற்றேன்…

பெண் : நீயே என் இதயமடா…
நீயே என் ஜீவனடா…

—BGM—


Notes : Orumurai Piranthen Song Lyrics in Tamil. This Song from Nenjirukkum Varai (2006). Song Lyrics penned by Thamarai. ஒரு முறை பிறந்தேன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading