பூவான ஏட்டத் தொட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மனோ & வாணி ஜெயராம்இளையராஜாபொன்மன செல்வன்

Poovaana yaetta thottu Song Lyrics in Tamil


ஆண் : பூவான ஏட்டத் தொட்டு…
பொன்னான எழுத்தாலே…

பெண் : ஆஹா பிரமாதம்…

ஆண் : கண்ணான கண்ணுக்கொரு…
கடுதாசி போட்டேனே…

பெண் : சபாஷ்… சபாஷ்…

ஆண் : ஏட்டப் பிரிச்சு…
எம் பாட்டப் படிச்சு…
ஏந்திக் கொள்ளம்மா…
என்னத் தாங்கிக் கொள்ளம்மா…

—BGM—

ஆண் : பூவான ஏட்டத் தொட்டு…
பொன்னான எழுத்தாலே…
கண்ணான கண்ணுக்கொரு…
கடுதாசி போட்டேனே…

ஆண் : ஏட்டப் பிரிச்சு…
எம் பாட்டப் படிச்சு…
ஏந்திக் கொள்ளம்மா…
என்னத் தாங்கிக் கொள்ளம்மா…

—BGM—

பெண் : ஏடாக என்னத் தொட்டு…
எழுதுங்க பாட்டு ஒன்னு…
நான் அதுக்காக காத்திருக்கேன்…

ஆண் : எண்ணத்தில் நீ இருந்தால்…
எழுத்துக்கு பஞ்சமில்லே…
ஆயிரம் பாட்டு எழுதி வைப்பேன்…

பெண் : நீ ஒரு பாட்டு பாடிடக் கேட்டு…
பூவென நெஞ்சு பூத்ததையா…

ஆண் : பூத்தது என்ன பாத்தது என்ன…
கேட்டது தானா கெடச்சதம்மா…

பெண் : அன்பாக என்னக் கொஞ்சம்…
ஆதரிக்க வேணும்…

ஆண் : அள்ளித்தான் சேத்துக் கொள்ள…
பாத்திருக்கேன் நானும்…

பெண் : ஆசைய நான்தான் மறச்சு வச்சேன்…

ஆண் : பூவான ஏட்டத் தொட்டு…
பொன்னான எழுத்தாலே…
கண்ணான கண்ணுக்கொரு…
கடுதாசி போட்டேனே…

ஆண் : ஏட்டப் பிரிச்சு…
எம் பாட்டப் படிச்சு…
ஏந்திக் கொள்ளம்மா…
என்னத் தாங்கிக் கொள்ளம்மா…

—BGM—

ஆண் : பூவான நெஞ்சக் கொஞ்சம்…
புரியாத மக்குப்புள்ள…
புரியிற நேரம் பொறந்ததம்மா…

பெண் : பொன்னான ஓம் மனச…
எப்போதோ புரிஞ்சுகிட்டேன்…
புது வழி தேடி சேர்ந்துகிட்டேன்…

ஆண் : வெதச்சது தானா வெளையிற காலம்…
நெனச்சது எல்லாம் கூடக் கண்டேன்…

பெண் : தாலிய நீதான் போடுற வரைக்கும்…
வேலிய நான்தான் போட்டு வச்சேன்…

ஆண் : பூவுக்கு வேலியிட்டா…
வாசம் எங்கு போகும்…

பெண் : பூ அள்ளி நீ கொடுத்தா…
பொண்ணு ஒன்னச் சேரும்…

ஆண் : கேட்டத எல்லாம் நான் தரவா…

பெண் : பூவான ஏட்டத் தொட்டு…
பொன்னான எழுத்தாலே…
கண்ணான கண்ணனோட…
கடுதாசி கண்டேனே…

பெண் : ஏட்டப் பிரிச்சு…
ஓம் பாட்டப் படிச்சேன்…
ஏந்திக் கொள்ளையா…
என்னத் தாங்கிக் கொள்ளையா…

ஆண் : பூவான ஏட்டத் தொட்டு…
பொன்னான எழுத்தாலே…
கண்ணான கண்ணுக்கொரு…
கடுதாசி போட்டேனே…

ஆண் : ஏட்டப் பிரிச்சு…
ஏம் பாட்டப் படிச்சு…
ஏந்திக் கொள்ளம்மா…
என்னத் தாங்கிக் கொள்ளம்மா…


Notes : Poovaana yaetta thottu Song Lyrics in Tamil. This Song from Ponmana Selvan (1989). Song Lyrics penned by Gangai Amaran. பூவான ஏட்டத் தொட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading