மேகமோ அவள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்பிரதீப் குமார் & அனந்துசந்தோஷ் நாராயணன்மேயாத மான்

Megamo Aval Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மேகமோ அவள்…
மாய பூ திரள்…
தேன் அலை சுழல்…
தேவதை நிழல்…

ஆண் : அள்ளி சிந்தும் அழகின் துளிகள்…
உயிரில் பட்டு உருளும்…
வசமில்லா மொழியில் இதயம்…
எதையோ உலரும்…

ஆண் : இல்லை அவளும் என்றே உணரும்…
நொடியில் இதயம் இருளும்…
அவள் பாத சுவடில்…
கண்ணீர் மலர்கள் உதிரும்…

ஆண் : மேகமோ அவள்…
மாய பூ திரள்…

—BGM—

ஆண் : வானவில் தேடியே…
ஒரு மின்னலை அடைந்தேன்…
காட்சியின் மாயத்தில்…
என் கண்களை இழந்தேன்…

ஆண் : என் நிழலும் என்னையே உதறும்…
நீ நகரும் வழியில் தொடரும்…
ஒரு முடிவே அமையா…
கவிதை உடையும்…

ஆண் : மேகமோ அவள்…
மாய பூ திரள்…
தேன் அலை சுழல்…
தேவதை நிழல்…

—BGM—

ஆண் : உன் ஞாபகம் தீயிட…
விறகாயிரம் வாங்கினேன்…
அறியாமலே நான் அதில்…
அரியாசனம் செய்கிறேன்…

குழு : இலை உதிரும் மீண்டும் துளிரும்…
வெண்ணிலாவும் கரையும் வளரும்…
உன் நினைவும் அது போல்…
மனதை குடையும்…

ஆண் : இலை உதிரும் மீண்டும் துளிரும்…
வெண்ணிலாவும் கரையும் வளரும்…
உன் நினைவும் அது போல்…
மனதை குடையும்…

ஆண் : மேகமோ அவள்…
மாய பூ திரள்…
தேன் அலை சுழல்…
தேவதை நிழல்…

ஆண் : அள்ளி சிந்தும் அழகின் துளிகள்…
உயிரில் பட்டு உருளும்…
வசமில்லா மொழியில்…
இதயம் எதையோ உலரும்…

ஆண் : இல்லை அவளும் என்றே உணரும்…
நொடியில் இதயம் இருளும்…
அவள் பாத சுவடில்…
கண்ணீர் மலர்கள் உதிரும்…

ஆண் : இல்லை அவளும் என்றே உணரும்…
மேகமோ அவள்…
நொடியில் இதயம் இருளும்…
அவள் பாத சுவடில்…
மாய பூ திரள்…
கண்ணீர் மலர்கள் உதிரும்…
தேவதை நிழல்…

ஆண் : மேகமோ அவள்…
மாய பூ திரள்…


Notes : Megamo Aval Song Lyrics in Tamil. This Song from Meyaadha Maan (2017). Song Lyrics penned by Vivek. மேகமோ அவள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading