மனசெல்லாம் மழையே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சோனு நிகம் & சைந்தவிஜி.வி. பிரகாஷ்குமார்சகுனி

Manasellam Mazhaiye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மனசெல்லாம் மழையே…
நனைகிறேன் உயிரே…

ஆண் : என் நெஞ்சில் வந்து தங்கி…
சாரல் அடித்தாய்…
என்னாகும் உயிரே… உயிரே…

ஆண் : என் கண்ணில் வந்து…
நின்று என்னை பறித்தாய்…
என்னாகும் உயிரே உயிரே…

ஆண் : இரவில் வந்தது சந்திரனா…
என் அழகே வந்தது உன் முகம்தான்…
வெண்ணிலவோ வாழ்ந்ததும் தேய்ந்திடுமே…
உன் அழகோ தேய்ந்திடாது வெண்ணிலா…

பெண் : பகலில் எாிப்பது சூரியனா…
என் அழகே உன் இரு பார்வைகள்தான்…
உன் இமைகள் போரிடும் ஆயுதம்தான்…
என்னுயிரே என்னை என்ன செய்கிறாய்…

ஆண் : மழையே மனம் உன்னாலே…
பூப் பூக்குதே…
ஓஓ… மனசெல்லாம் மழையே…
நனைகிறேன் உயிரே…

—BGM—

ஆண் : வானில் போகும் பறவைகளாய்…
நீயும் நானும் பிறந்திடலாம்…
உலகையே மறக்கலாம்…

பெண் : ஹா… வேறு வேறு விண்வெளியில்…
மாறி மாறி பிாிந்திடலாம்…
பறக்கலாம் மிதக்கலாம்…
காற்றாகி கை கோர்த்து போவோமே…

ஆண் : முகிலாய் அங்கும் இங்கும்…
ஊஞ்சல் ஆடுவோம்…

பெண் : கனவில் வாழ்வது சாத்தியமா…
என் எதிரே நடப்பது மந்திரமா…
கண் பார்க்கும் காட்சிகள் தந்திரமா…
என் தேகம் எங்கு நீந்தி போகுதோ…

ஆண் : கனவில் வாழ்வது சாத்தியமே…
என் கனவும் பலிப்பது நிச்சயமே…
உன் விரலை பிடிப்பேன் இக்கணமே…
உன் உருவம் என்னுள் என்றும் வாழுமே…

ஆண் : மழையே மனம் உன்னாலே…
பூப் பூக்குதே…
ஓஓ… மனசெல்லாம் மழையே…
நனைகிறேன் உயிரே…

—BGM—

ஆண் : காதலாகி கரைந்துவிட்டால்…
காலம் நேரம் மறந்திடுமே…
வானிலை மாறுமே…

பெண் : ஏழு வண்ண வானவில்லில்…
நூறு வண்ணம் தோன்றிடுமே…
யாவுமே மாயமே…
வெயிலோடு மழை வந்து தூறுமே…

ஆண் : முகிலாய் அங்கும் இங்கும்…
ஊஞ்சல் ஆடுவோம்…

ஆண் : தரையில் விண்மீன் வருவதில்லை…
வந்தாலும் கண் அதை பார்ப்பதில்லை…
பார்த்தாலும் கை அதை தொடுவதில்லை…
தொட்டாலோ என்ன ஆகும் என் மனம்…

பெண் : தரையில் விண்மீன் வருவதுண்டு…
வந்தாலும் கண் அதை பார்ப்பதுண்டு…
பார்த்தாலும் கை அதை தொடுவதுண்டு…
தொட்டாலோ காதல் ஆகும் உன் மனம்…

ஆண் : மழையே மனம் உன்னாலே…
பூப் பூக்குதே… ஓஓ…

பெண் : மனசெல்லாம் மழையே…

—BGM—


Notes : Manasellam Mazhaiye Song Lyrics in Tamil. This Song from Saguni (2012). Song Lyrics penned by Na. Muthukumar. மனசெல்லாம் மழையே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading