தேன் காற்று

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைஹரிசரண் & ஷாஷா திருப்பதிஹாரிஸ் ஜெயராஜ்கெத்து

Thaen Kaatru Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை என்னைத் தீண்டத் தானே வந்தது…
அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது…

பெண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை மட்டும் தீண்டிப் போக வந்தது…
அது என்னை என்றோ தீண்டி தீண்டிக் கொன்றது…

ஆண் : இந்த ஒரு நாள் வருமா…
இல்லை ஒடிந்தே விழுமா…
என பல நாள் பல நாள்…
பாதி கனாவில் எழுந்தேன் தகுமா…

பெண் : நான் பனியா பனியா…
நீ வெயிலின் துளியா…
நான் கரையும் கரையும் வரை நீ…
வரை நீ வாகைத் தொடவா…

ஆண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை என்னைத் தீண்டத்தானே வந்தது…

பெண் : அது என்னை என்றோ தீண்டி தீண்டிக் கொன்றது…

—BGM—

பெண் : உன் கனக கனக மனம் உலக உலக கணம்…
எடையிட முடியாது…
இங்கு நான் உனதெனில் ஆகணும் எனில்…
முதுகில் கோது…

ஆண் : உன் அழகு அழகு முகம் பழக பழக…
சுகம் ஒரு துளி திகட்டாது…
உன் அன்பெனும் குணம் ஆயிரம் வரம்…
நிகரும் ஏது…

பெண் : இருவரும் நடந்தால் தரையினில் இரு கால்…
சுமப்பது நீ அல்லவா…

பெண் : தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை மட்டும் தீண்டிப் போக வந்தது…

ஆண் : அது என்னை மட்டும் ஏனோ தீண்டிச் சென்றது…

—BGM—

ஆண் : நான் அலையும் அலையும் அலை…
கரையை அடைவதில்லை…
கடலிலும் இடமில்லை ஒரு காதலன் நிலை…
மாபெரும் அலை முடிவே இல்லை…

பெண் : நான் பொழியும் பொழியும் மழை…
பெருகும் பொழுது பிழை திரும்பிட வழி இல்லை…
ஒரு காதலி நிலை மழை எனும் கலை விளையாட்டில்லை…

ஆண் : ஓஹோ… நீ விடி விளக்கு முகத்திரை விளக்கு…
அதன் பின் நான் கிறுக்கு…

ஆண் : ஓ… தேன் காற்று வந்தது…
தேம்பாவணியாய் கொஞ்சுது…
உன்னை என்னைத் தீண்டத்தானே வந்தது…

பெண் : அது என்னை என்றோ தீண்டி தீண்டிக் கொன்றது…

ஆண் : இந்த ஒரு நாள் வருமா…
இல்லை ஒடிந்தே விழுமா…
என பல நாள் பல நாள் பாதி கனாவில்…
எழுந்தேன் தகுமா…

பெண் : நான் பனியா பனியா…
நீ வெயிலின் துளியா…
நான் கரையும் கரையும் வரை நீ…
வரை நீ வாகைத் தொடவா…


Notes : Thaen Kaatru Song Lyrics in Tamil. This Song from Gethu (2016). Song Lyrics penned by Thamarai. தேன் காற்று பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading