தாய் உண்டு தந்தை உண்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
இளையராஜாஇளையராஜாஇளையராஜாகோயில் காளை

Thaayundu Thantai Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…

ஆண் : நான் ஓரு பரதேசி அய்யய்யய்யா…
நல்லோர் கால் தூசி அய்யய்யய்யா…
எல்லோரும் என்னைத் தள்ள…
நானாகச் சொல்லிக் கொள்ள…

ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…

—BGM—

ஆண் : பெற்றவள் பெற்றெடுத்து தெய்வத்தின் காலடியில்…
போட்ட கதையைச் சொல்லவா…
உற்றவர் குற்றங்களை எந்தன் மேல் கட்டி வைத்து…
விட்ட கதையைச் சொல்லவா…

ஆண் : அய்யா ஓர் துன்பம் வந்து…
தெய்வத்திடம் போய் உரைத்தால்…
கை தந்து காக்கும் அல்லவா…

ஆண் : தெய்வமே துன்பம் தந்தால்…
எங்கே சென்று போய் உரைப்போம்…
நல்லோர்க்கு காலம் இல்லையா…

ஆண் : எல்லாமும் இங்கே உண்டு உண்மை இல்லே…
நானே சொல்கின்ற வாக்கில் ஏதும் பொய்யே இல்லே…
நானே சொல்கின்ற வாக்கில் ஏதும் பொய்யே இல்லே இல்லே…

ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…

—BGM—

ஆண் : தூரத்துப் பச்சை கண்டு இச்சையோ பட்டதில்லை…
மேலும் நான் என்ன சொல்லட்டும்…
யாருக்கும் பிச்சை இட பேருக்கும் செல்வம் இல்லை…
நேரத்தை என்ன சொல்லட்டும்…

ஆண் : அன்னையின் பாலை உண்டு…
ஆரீராரோ கேட்டதில்லை…
அம்மம்மா என்ன கொடுமை…

ஆண் : திண்ணையில் நான் வளர்ந்தும்…
தெருவில் தர்மம் கேட்கவில்லை…
மேலும் ஏன் இந்தச் சிறுமை…

ஆண் : தெய்வங்கள் தந்த பிச்சை பொய்யா பொய்யா…
இங்கே பொய் ஒன்றே மெய்யாய் போச்சே அய்யா அய்யா…
இங்கே பொய் ஒன்றே மெய்யாய் போச்சே அய்யா அய்யய்யய்யா…

ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…
தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…

ஆண் : நான் ஓரு பரதேசி அய்யய்யய்யா…
நல்லோர் கால் தூசி அய்யய்யய்யா…
எல்லோரும் என்னைத் தள்ள…
நானாகச் சொல்லிக் கொள்ள…

ஆண் : தாய் உண்டு தந்தை உண்டு பெற்றோர் இல்லே…
அய்யா ஊர் உண்டு உலகும் உண்டு உற்றார் இல்லே…

Notes : Thaayundu Thantai Song Lyrics in Tamil. This Song from Koyil Kaalai (1993). Song Lyrics penned by Ilaiyaraja. தாய் உண்டு தந்தை உண்டு பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading