தாறுமாறு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிடி. ராஜேந்தர் & பிரியதர்ஷினிதமன் எஸ்வாலு

Thaarru Maarru Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே… அதோ அந்த பறவைய போல…
நாம் வாழ வேண்டுமடா…

பெண் : ஹே… இதோ இந்த அலைகள போல…
நாம் ஆட வேண்டுமடா…

ஆண் : என் கண் போன போக்கில்…
நீ கால் வைக்காத…

பெண் : உன் கால் போன போக்கில்…
நீ மனம் வைக்காத…

ஆண் : உன்னை நீ அறிந்தால் போராடலாம்…
பெண் : தலை வணங்காமல் நீ வாழலாம்…

ஆண் : ஆயிரத்தில் ஒருவன் இங்க யாரு யாரு…
பெண் : அது அப்போ இப்போ எப்போவுமே வாத்தியாரு…

ஆண் : தா தாறுமாறு… தா தாறுமாறு… தா தாறுமாறு…
வந்தாரு வந்தாரு வாத்தியாரு…
தா தாறுமாறு… தா தாறுமாறு… தா தாறுமாறு…
வந்தாரு வந்தாரு வாத்தியாரு…

—BGM—

ஆண் : பொதுவா என் மனசு தங்கம்…
ஒரு போட்டியினா சிங்கம்…
வெற்றி மேல வெற்றி என்ன தேடி வரும்…

பெண் : வெற்றி நிச்சயம் தான்…
அது வேத சத்தியம் தான்…
வெற்றிக்கொடி கட்டு பின்ன பொண்ணு வரும்…

ஆண் : ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன…
எல்லாமே ஓரினம்தான்…

பெண் : ஆலப்போல் வேலப்போல் ஆலம் விழுதப்போல்…
உன் நெஞ்சில் நான் விழத்தான்…

ஆண் : சிங்க நட தங்க மகன் இங்க யாரு…
பெண் : அட அப்போ இப்போ எப்போவுமே சூப்பர் ஸ்டாரு…

ஆண் : தா தாறுமாறு… தா தாறுமாறு… தா தாறுமாறு…
வந்தாரு வந்தாரு சூப்பர் ஸ்டாரு…
தா தாறுமாறு… தா தாறுமாறு… தா தாறுமாறு…
வந்தாரு வந்தாரு வந்தாரு…

—BGM—

ஆண் : ஏப்ரல் மாதத்தில ஒரு அர்த்த ஜாமத்தில…
ஜன்னலோரத்தில வந்த நிலா எங்கடி…

பெண் : கொஞ்ச நாளு பொறு தலைவா…
அந்த வஞ்சிக்கொடி வருவா…
வெண்ணிலவ கூட அவ தோற்க்கடிப்பா…

ஆண் : அம்பானி பரம்பர அஞ்சாறு தலைமுற…
என்கூட வா சுத்துவா…

பெண் : நீ விளையாடு மங்காத்தா…
விடமாட்டா எங்காத்தா…
உன் வீட்டில் விளக்கேத்துவா…

ஆண் : அட வத்திக்குச்சி பத்திக்காது சொன்னது யாரு…
பெண் : அது ஒரு வரலாறு எங்க தலைய பாரு…

ஆண் : தா தாறுமாறு… தா தாறுமாறு… தா தாறுமாறு…
தத்தீம தத்தீம தலைய பாரு…
தா தாறுமாறு… தா தாறுமாறு… தா தாறுமாறு…
தத்தீம தத்தீம தலைய பாரு…

—BGM—

ஆண் : ஹே… காதல் நான் வளத்தேனே பெண்ணே…
உன்மேலதான் வளத்தேன்…

பெண் : ஹே லூசு பொண்ணு ஓமன பொண்ணு…
பின்னால ஏன் அலைஞ்சே…

ஆண் : ஓசானா நீ பேசு தீராமலே…
பெண் : குட்டி பிசாசு நீ மாறாமலே…

ஆண் : வச்சிக்கவா உன்ன கூரை மேலே…
பெண் : அம்மாடி ஆத்தாடி ஆரோமலே…

ஆண் : ஹே கலாசலா போட்டு இங்க வந்தது யாரு…
அட தாறுமாறு ஸ்டாரு இவன் எஸ் டி ஆரு…

ஆண் : தா தாறுமாறு… தா தாறுமாறு… தா தாறுமாறு…
டி ஆரு டி ஆரு எஸ் டி ஆரு…
தா தாறுமாறு… தா தாறுமாறு… தா தாறுமாறு…
டி ஆரு டி ஆரு எஸ் டி ஆரு…

—BGM—

ஆண் : தாறுமாறு…


Notes : Thaarru Maarru Song Lyrics in Tamil. This Song from Vaalu (2015). Song Lyrics penned by Madhan Karky. தாறுமாறு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading