தானந்தன கும்மிகொட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிறைசூடன்மலேசியா வாசுதேவன் & எஸ். ஜானகிஇளையராஜாஅதிசயபிறவி

Thaanandhana Kummikotti Song Lyrics in Tamil


BGM

ஆண் : தானந்தன கும்மிகொட்டி…
குழு : கும்மிகொட்டி கும்மிகொட்டி…
ஆண் : ஆஹா… யார் வந்தது நெஞ்சுக்குள்ளே…
குழு : நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…

பெண் : பூக்கோலம் இள மான் போட…
ஆண் : புது மாக்கோலம் விழி மீன் போட…

பெண் : அடி அம்மா முத்து முத்தா…
சுகம் கொஞ்சுது கொஞ்சுதையா…

ஆண் : சொந்தத்தில் தானந்தன கும்மிகொட்டி…
குழு : கும்மிகொட்டி கும்மிகொட்டி…
ஆண் : ஆஹா… யார் வந்தது நெஞ்சுக்குள்ளே…
குழு : நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…

BGM

பெண் : தானாக பொண்ணுக சிக்கும் மச்சினன் கைராசி…
அதை நான் பாத்தேன் கண்ணுல சிக்கி அப்படி உன் ராசி…

ஆண் : சிறுவாணி கெண்டையப்போல மின்னுது கண் ராசி…
நீ சிரிச்சாக்க சில்லறை கொட்டும் உத்தமி உன் ராசி…

பெண் : நான் வாங்கிடும் உள் மூச்சிலே…
நீ சேரவே சூடாச்சுதே…

ஆண் : வஞ்சி மனம் பூத்தாட…
கெஞ்சி தினம் கூத்தாட…

பெண் : ஒண்ணுக்குள்ளே ஒண்ணு வந்து…
உன் உயிரோட ஒட்டுதய்யா…

ஆண் : தானந்தன கும்மிகொட்டி…
குழு : கும்மிகொட்டி கும்மிகொட்டி…
ஆண் : ஆஹா… யார் வந்தது நெஞ்சுக்குள்ளே…
குழு : நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…

பெண் : பூக்கோலம் இள மான் போட…
புது மாக்கோலம் விழி மீன் போட…

ஆண் : அடி அம்மா முத்து முத்தா…
சுகம் கொஞ்சுது கொஞ்சுதம்மா…

பெண் : சொந்தத்தில் தானந்தன கும்மிகொட்டி…
குழு : கும்மிகொட்டி கும்மிகொட்டி…
பெண் : ஆஹா… யார் வந்தது நெஞ்சுக்குள்ளே…
குழு : நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…

BGM

ஆண் : ஆத்தாடி தஞ்சாவூரு சொக்குற நெல்லாட்டம்…
அட கூத்தாடும் வைகை ஆறு பாடுற எம் பாட்டும்…

பெண் : தேரோடும் தென்மதுரை சன்னிதி கண்டவனோ…
அந்த ஊராண்ட உத்தமனின் சந்ததி வந்தவனோ…

ஆண் : உனை ஆள்வதே பெரும்பாடம்மா…
ஊர் ஆள்வதே எனக்கேனம்மா…

பெண் : நெஞ்சத்திலே நீ ஆள…
மஞ்சத்திலே நான் ஆள…

ஆண் : காதலென்னும் ஆட்சிதனை…
வானமும் கூட வாழ்த்துதம்மா…

பெண் : தானந்தன கும்மிகொட்டி…
குழு : கும்மிகொட்டி கும்மிகொட்டி…
பெண் : ஆஹா… யார் வந்தது நெஞ்சுக்குள்ளே…
குழு : நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…

ஆண் : பூக்கோலம் இள மான் போட…
புது மாக்கோலம் விழி மீன் போட…

பெண் : அடி அம்மா முத்து முத்தா…
சுகம் கொஞ்சுது கொஞ்சுதையா…

ஆண் : சொந்தத்தில் தானந்தன கும்மிகொட்டி…
குழு : கும்மிகொட்டி கும்மிகொட்டி…
பெண் : ஆஹா… யார் வந்தது நெஞ்சுக்குள்ளே…
குழு : நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே…

BGM


Notes : Thaanandhana Kummikotti Song Lyrics in Tamil. This Song from Athisaya Piravi (1990). Song Lyrics penned by Piraisoodan. தானந்தன கும்மிகொட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading