டங்கா டுங்கா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்பாண்டி & ராஜாயுவன் ஷங்கர் ராஜாபருத்திவீரன்

Tanka Dunga Song Lyrics in Tamil


ஆண் : ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி…
மங்கா சுங்கா மவுசுக்காரி…
ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி…
மங்கா சுங்கா மவுசுக்காரி…

ஆண் : மதுரை டவுனுகுள்ளே…
ஏன் மவுசை கொஞ்சம் கேளடி புள்ள…
மதுரை டவுனுகுள்ளே…
ஏன் மவுசை கொஞ்சம் கேளடி புள்ள…

பெண் : ஏய் அல்லிக்கீரை மல்லிக்கீரை…
அச்சம்பாக்கம் அகத்திக்கீரை… ஏய்…
ஆண் : எப்படி எப்படி…

பெண் : ஏய் அல்லிக்கீரை மல்லிக்கீரை…
அச்சம்பாக்கம் அகத்திக்கீரை…
வக்கணையா உனக்கு வக்கணையா…
சமைச்சு வைக்க…
ஆண் : அப்படியா…

பெண் : என்னைய பக்குவமா பாக்கனுங்க…
ஆண் : ஆகான்…
பெண் : அட வக்கணையா…
அட வக்கணையா சமைச்சு வைக்க…
என்னைய பக்குவமா பாக்கனுங்க…

BGM

ஆண் : அக்கா மகளே சொர்ணம்…
என் பக்கம் நீயும் வரணும்…
பெண் : வந்துருவோம்…

ஆண் : அக்கா மகளே சொர்ணம்…
என் பக்கம் நீயும் வரணும்…
மாமன் மகளே மயிலே மயிலே…
மச்சானுக்கு ஹலோ சொல்லுடி ஒயிலே ஒயிலே…
மாமன் மகளே மயிலே மயிலே…
மச்சானுக்கு ஹலோ சொல்லுடி ஒயிலே ஒயிலே…

பெண் : என்னவா இங்கிலீபிசு தூக்குது…
ஆண் : ஆகான்… எல்லாம் உன்னைய பாத்ததுக்கு…
அப்புறந்தான் மேலயும் கீழயும் ஏறுது எறங்குது…
பெண் : என்னது…
ஆண் : மூச்சுதான்…
பெண் : பாத்து மச்சான் மூச்சு சூடானா…
முந்தி பத்திகிட்டு சந்தி சிரிச்சிரும்…
உங்க லவ்ச எல்லாம் ஓரங்கட்டிட்டு…
வந்திருக்கிறவங்களுக்கு ஒரு வணக்கம் சொல்லுங்க…

BGM

ஆண் : அய்யா வாரும் சபையோரே வயசில பெரியோரே…
வாரும் சபையோரே வயசில பெரியோரே…

BGM

ஆண் : அய்யா கூடும் சபையோரே குணத்துல பெரியோரே…
கூடும் சபையோரே குணத்துல பெரியோரே…

BGM

ஆண் : வந்தனமின்னா வந்தனம்…
இங்க வந்த சனமெல்லாம் குந்தனும்…
வந்தனமின்னா வந்தனம்…
இங்க வந்த சனமெல்லாம் குந்தனும்…

BGM

ஆண் : வரும்பொழுது வாங்கி வந்தேன்…
மணக்கும் நாறு சந்தனம்…
வரும்பொழுது வாங்கி வந்தேன்…
மணக்கும் நாறு சந்தனம்…

BGM

ஆண் : இந்த சந்தனத்த பூசுங்க…
நீங்க சந்தோசமா கேளுங்க…
சந்தனத்த பூசுங்க…
நீங்க சந்தோசமா கேளுங்க…

BGM

ஆண் : ஏய்… வெத்தலத்தானே போடுங்க…
விசிறி இருந்தா வீசுங்க…
வெத்தலத்தானே போடுங்க…
விசிறி இருந்தா வீசுங்க…

BGM

ஆண் : அய்யா வெத்தலன்னா வெத்தல…
இது வெருகனூரு வெத்தல…
வெத்தலன்னா வெத்தல…
இது வெருகனூரு வெத்தல…

BGM

ஆண் : அத வாங்கி வந்தே ஒத்தையில…
வாய்க்கு கூட பத்தலை…
வாங்கி வந்தே ஒத்தையில…
வாய்க்கு கூட பத்தலை…

BGM

ஆண் : அய்யா நீங்க பெத்த பிள்ளை நானுங்க…
அம்மா நீங்க பெத்த பிள்ளை நானுங்க…
பாட்டில் குறை இருந்தா நீங்க கொஞ்சம் கண்டுக்கறாதீங்க…
திரனா திரனா திரனா திரனானா…

பெண் : பர்மா சைனா எங்க ஊரு…
பக்கம் வந்து சிங்கப்பூர்…
பர்மா சைனா எங்க ஊரு…
பக்கம் வந்து சிங்கப்பூர்…

பெண் : பாருக்கு பயந்து நாங்க…
வந்ததிப்போ இந்த ஊரு…
பாருக்கு பயந்து நாங்க…
வந்ததிப்போ இந்த ஊரு…

BGM

ஆண் : எங்க குல தங்கோய்…
தேவர் குல சிங்கோய்…
எழில்முத்து ராமலிங்கோய்… ஓஓ…
எழில்முத்து ராமலிங்கோய்…

BGM

ஆண் : உள்ளம் உருக எங்க தங்கோய்…
முக்குலத்து மாவர்சிங்கோய்…
உள்ளம் உருக எங்க தாங்கோய்…
முக்குலத்து மாவர்சிங்கோய்…

ஆண் : குன்றினடியிலே இருந்தார் குமரனையே நினைத்திருந்தார்…
குன்றினடியிலே இருந்தார் குமரனையே நினைத்திருந்தார்…
பசும்பொன்னை காக்கவே பாரிவள்லல் அடைந்தோய்…
பசும்பொன்னை காக்கவே பாரிவள்லல் அடைந்தோய்…
பசும்புல் தங்கமய்யா… ஓ… பசும்புல் தங்கமய்யா…

BGM


Notes : Tanka Dunga Song Lyrics in Tamil. This Song from Paruthiveeran (2006). Song Lyrics penned by Snehan. டங்கா டுங்கா பாடல் வரிகள்.


Scroll to Top