ஆம்பளைக்கும் பொம்பளைக்கும்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கிருஷ்ணராஜ், வேல்முருகன் & சத்யன்யுவன் ஷங்கர் ராஜாகழுகு 

Aambalaikum Pombalaikum Song Lyrics in Tamil


ஆண் : ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்…
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்…
காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம்…
அது எப்போதுமே போதையான நிலவரம்…

BGM

ஆண் : ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்…
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்…
காதல் ஒரு கண்ணாம்பூச்சி கலவரம்…
அது எப்போதுமே போதையான நிலவரம்…

ஆண் : அப்போ ஆணும் பொண்ணும் ஒத்துமையா இருந்துச்சு…
அது காதலிலே உலகத்தையே மறந்துச்சு…

ஆண் : அது வாழ்ந்த போதிலும்…
இல்ல இறந்த போதிலும்…
அது பிரிஞ்சதே இல்ல…
அது மறஞ்சதே இல்ல…

ஆண் : தினம் ஜோடி ஜோடியாய் இங்க செத்து கிடக்கும்டா…
அத தூக்கும் போதெல்லாம் என் நெஞ்சு வலிக்கும்டா…

BGM

ஆண் : நீ சொல்லும் காதல் எல்லாம்…
மலை ஏறி போச்சு சிட்டு…
தும்மல போல வந்து போகுது இந்த காதலு…

ஆண் : காதலுன்னு சொல்லுராங்க கண்டபடி சுத்துராங்க…
டப்பு கொறைஞ்சா மப்பு கொறைஞ்சா தள்ளி போறாங்க…

ஆண் : காதல் எல்லாமே ஒரு கண்ணாம்பூச்சி…
இதில் ஆணும் பெண்ணுமே தினம் காணா போச்சு…
காதலிலே தற்கொலைகள் கொறைஞ்சே போச்சு…

ஆண் : அட உண்மை காதலே இல்ல சித்தப்பு…
இங்க ஒருத்தன் சாவுறான்…
ஆனா ஒருத்தன் வாழுறான்…

ஆண் : அட என்னடா உலகம்…
இதில் எத்தன கலகம்…
இங்க காதலே பாவம்…
இது யார் விட்ட சாபம்…

ஆண் : ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்…
அத காதலுன்னு சொல்லுராங்க அனைவரும்…

BGM

ஆண் : இன்னைக்கு காதல் எல்லாம்…
ரொம்ப ரொம்ப மாறிடிச்சு…
கண்ண பாக்குது கைய கோர்க்குது ரூமு கேட்குது…

ஆண் : எல்லாம் முடிஞ்ச பின்னும் பிரண்டுனு சொல்லிக்கிட்டு…
வாழுரவங்க ரொம்ப பேருடா கேட்டு பாருடா…

ஆண் : இப்ப காதல் தோத்துட்டா யாரும் சாவதே இல்ல…
அட ஒன்னு தோத்துட்டா ரெண்டு இருக்குது உள்ள…
இப்ப எல்லாம் தேவதாசு எவனும் இல்ல…

ஆண் : அவன் பொழுது போக்குக்கு ஒரு பிகர பாக்குறான்…
அவ செலவு பண்ணதான் ஒரு லூச தேடுறா…
ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுறா…
ரொம்ப புளிச்சி போச்சுனா கை குலுக்கி பிரியிறா…

ஆண் : அவன் பொழுது போக்குக்கு ஒரு பிகர பாக்குறான்…
அவ செலவு பண்ணதான் ஒரு லூச தேடுறா…
ரெண்டு பேருமே இங்க பொய்யா பழகுறா…
ரொம்ப புளிச்சி போச்சுனா கை குலுக்கி பிரியிறா…

BGM


Notes : Aambalaikum Pombalaikum Song Lyrics in Tamil. This Song from Kazhugu (2012). Song Lyrics penned by Snegan. ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் பாடல் வரிகள்.


Scroll to Top