ஆத்தாடி மனசுதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பிரியா ஹேமேஷ்யுவன் ஷங்கர் ராஜாகழுகு 

Aathadi Manasudhan Female Song Lyrics in Tamil


—BGM—

பெண் : ஆத்தாடி மனசுதான்…
ரெக்ககட்டி பறக்குதே…
ஆனாலும் வயசுதான்…
கிட்ட வர தயங்குதே…

பெண் : அக்கம் பக்கம் பாத்து பாத்து…
ஆசையாக வீசும் காத்து…
நெஞ்சுக்குள்ள எதோ பேசுதே…

பெண் : அடடா இந்த மனசுதான்…
சுத்தி சுத்தி உன்ன தேடுதே…
அழகா இந்த கொலுசுதான்…
தத்தி தத்தி உன் பெயர் சொல்லுதே…

பெண் : ஆத்தாடி மனசுதான்…
ரெக்ககட்டி பறக்குதே…
ஆனாலும் வயசுதான்…
கிட்ட வர தயங்குதே…

—BGM—

பெண் : கிட்ட வந்து நீயும் பேசும் போது…
கிட்ட தட்ட கண்ணு வேர்த்து போகும்…
மூச்சே காய்ச்சலா மாறும்…

பெண் : விட்டு விட்டு உன்ன பாக்கும் போது…
வெட்டி வெட்டி மின்னல் ஒன்னு மோதும்…
மனசே மார்கழி மாசம்…

பெண் : அருகில் உந்தன் வாசம்…
இந்த காத்தில் வீசுது…
விழி தெருவில் போகும் உந்தன்…
உருவம் தேடுது…

பெண் : பாவி நெஞ்ச என்ன செஞ்ச…
உந்தன் பேர சொல்லி கொஞ்ச…
என்ன கொன்னாலும் அப்போதும்…
உன் பேர சொல்வேனடா…

—BGM—

பெண் : ஒன்ன ரெண்டா என்ன…
நானும் சொல்ல…
ஓராயிரம் ஆச வச்சேன் உள்ள…
பேச தைரியம் இல்ல…

பெண் : உள்ள ஒரு வார்த்த வந்து துள்ள
உள்ளம் என்ன முட்டி முட்டி தள்ள…
இருந்தும் வெட்கத்தில் செல்ல…

பெண் : காலம் யாவும் நாளும்…
உன்ன பார்த்தே வாழனும்…
உயிர் போகும் நேரம் உந்தன்…
மடியில் சாய்ந்தே சாகனும்…

பெண் : உன்ன தவிர என்ன வேணும்…
வேற என்ன கேட்க தோணும்…
நெஞ்சம் உன்னோட வாழாம…
மண்ணோடு சாயாதடா…

—BGM—


Notes : Aathadi Manasudhan Female Song Lyrics in Tamil. This Song from Kazhugu (2012). Song Lyrics penned by Na. Muthukumar. ஆத்தாடி மனசுதான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading