பாதகத்தி கண்ணுபட்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாகழுகு 

Paathagathi Kannupattu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பாதகத்தி கண்ணுபட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு…
பாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி எடை கொறஞ்சு…

ஆண் : பட்ட மரம் ஒன்னு பொசுக்குன்னு துளிர்க்குதே…
நீ சிரிக்கும் போது என் மனசு வழுக்குதே…

ஆண் : ஏ உன்கிட்ட கெஞ்ச என்னோட நெஞ்ச…
என்னடி செஞ்ச சொல்லு சொல்லு…
காதல சொன்னேன் கற்ப்பூர கண்ண…
என்னடி பண்ண சொல்லு சொல்லு…

ஆண் : பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு…

—BGM—

ஆண் : மனசு முழுக்க ஆசை என்னடி நானும் பேச…
நாக்கு குள்ள கூச தடுமாறிப் போனேன்…

ஆண் : காணாத கானகத்தில் அலைஞ்சு திரிஞ்சேன் நானும்தான்…
காத்தாக என்னை உரசி சாச்சிபுட்ட நீயும்தான்…

ஆண் : உள்ளங்கால் நிழலாட்டம் நிழலாட்டம்…
ஒட்டிகிட்டேன் நான்…
உன் பேர உசுரு மேல உசரு மேல…
வெட்டிகிட்டேன் நான்…

ஆண் : பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு…

—BGM—

ஆண் : அழுக்கா கெடந்த மனச நீ எறங்கி அலச…
மறந்து நிக்கிறேன் பழச புரியாமதானே…

ஆண் : ஆகாயம் தாண்டி எங்கோ பறந்து போறேன் நானும்தான்…
அங்கேயும் உன் நினைப்ப அனுப்பி வெக்கிற நீயும்தான்…

ஆண் : நீ பார்த்த செடி போல செடி போல தலையும் ஆடுதே…
உன் கூட நதி போல நதி போல காலும் ஓடுதே…

ஆண் : பாதகத்தி கண்ணு பட்டு பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு…
பாறாங்கல்லு இறக்க கட்டி பறக்குதடி எடை கொறஞ்சு…

ஆண் : பட்ட மரம் ஒன்னு பொசுக்குன்னு துளிர்க்குதே…
நீ சிரிக்கும் போது என் மனசு வழுக்குதே…

ஆண் : ஏ உன்கிட்ட கெஞ்ச என்னோட நெஞ்ச…
என்னடி செஞ்ச சொல்லு சொல்லு…
காதல சொன்னேன் கற்ப்பூர கண்ண…
என்னடி பண்ண சொல்லு சொல்லு…


Notes : Paathagathi Kannupattu Song Lyrics in Tamil. This Song from Kazhugu (2012). Song Lyrics penned by Snegan. பாதகத்தி கண்ணுபட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading