கேட்டா கொடுக்கிற

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைசின்மயி, கங்கா சித்தராசு, ஜெஸ்ஸி கிப்ட் & சுஜாதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாசண்டக்கோழி

Ketta Kodukkira Boomi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கேட்டா கொடுக்கிற பூமி இது…
கேக்காம கொடுக்கிற சாமி இது…
கேட்டா கொடுக்கிற பூமி இது…
கேக்காம கொடுக்கிற சாமி இது…

ஆண் : கையில கத்தி இருக்கும்…
மீச சுத்தி இருக்கும்…
பெரிய நெத்தி இருக்கும்…
கோபம் அப்படி இருக்கும்…

குழு : ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்…
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்…
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்…
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்…

ஆண் : சாமி சாமி சாமிடா…
வெள்ளை குதிரை ஏறி வரும் நம்ம குல சாமிடா…
காமி காமி காமிடா…
நெஞ்ச பொளந்து சத்தியத்தில் சூடம் ஏத்தி காமிடா…

ஆண் : கேட்டா கொடுக்கிற பூமி இது…
கேக்காம கொடுக்கிற சாமி இது…

—BGM—

ஆண் : உள்ளுக்குள்ளே ஒரு ஆச ஒளிச்சு வச்சேன்…
அத உன்கிட்ட சாமி கிட்ட சொல்லி வச்சேன்…

பெண் : நெஞ்சுக்குள்ள ஒரு ஆச ஒளிச்சு வச்சேன்…
அத சாமி கிட்ட சொல்லலையே மறைச்சு வச்சேன்…

பெண் : எல்லாருக்கும் என்னனவோ கனவிருக்கு…
அட யாருக்கு யார தான் புடிச்சிருக்கு…
இந்த ஜோடி எங்களுக்கு புடிச்சிருக்கு…
இவ விளக்கேத்த எங்க வீடு தவம் கிடக்கு…

குழு : மணக்க மணக்க பூ தாரா எடுத்து எடுத்து வருவோம்…
கணக்கு வழக்கு பார்க்காம தடுக்கு துள்ளி தருவோம்…

குழு : ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்…
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்…
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்…
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்…

—BGM—

ஆண் : பத்து மைல் தூரத்துல நீ வருவ…
இந்த பக்தனோட மனசு எல்லாம் தீ பிடிக்கும்…

பெண் : முத்தம் கொடு தூரத்துல நீ இருப்ப…
அந்த சூட்டிலே மனசெல்லாம் குளிர் எடுக்கும்…

பெண் : ஆசபட்ட நாயகன அடைஞ்சாலே…
அவ ஆறடி சேலையில முடிஞ்சாலே…
அடங்காத காளைக்கு கயிறாக…
ஒரு மயில் தோகை வாச்சிருக்கு வகையாக…

குழு : சாமி கட்டு பறி போகும்…
சமையல் கட்டு பறி போகும்…
வாச கோலம் கை மாறும்…
வாரிசு ஒன்னு உருவாகும்…

ஆண் : கேட்டா கொடுக்கிற பூமி இது…
கேக்காம கொடுக்கிற சாமி இது…
கேட்டா கொடுக்கிற பூமி இது…
கேக்காம கொடுக்கிற சாமி இது…

ஆண் : கையில கத்தி இருக்கும்…
மீச சுத்தி இருக்கும்…
பெரிய நெத்தி இருக்கும்…
கோபம் அப்படி இருக்கும்…

குழு : ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்…
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்…
ஆடுவோம் பாடுவோம் கொண்டாடுவோம்…
கூடுவோம் சேருவோம் கூத்தாடுவோம்…

—BGM—


Notes : Ketta Kodukkira Boomi Song Lyrics in Tamil. This Song from Sandakozhi (2005). Song Lyrics penned by Thamarai. கேட்டா கொடுக்கிற பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading