ஊரோரம் புளியமரம்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்பாண்டி, கலா, சரோஜா & லட்சுமியுவன் ஷங்கர் ராஜாபருத்திவீரன்

Oororam Puliamaram Song Lyrics in Tamil


பெண் : ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலங்கும்…
ஊரோரம் புளியமரம் உலுப்பிவிட்டா சலசலங்கும்…
நாம் பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டாமையாய்…
நாம் பிறந்த மதுரையிலே ஆளுக்காளு நாட்டாமையாய்…

—BGM—

பெண் : கூடினமே கூடினமே பூட்டுவண்டிக் காளை போலே…
கூடினமே கூடினமே பூட்டுவண்டிக் காளை போலே…
மாட்டினமே மாட்டினமே நாரப்பய கையுமேலே…
மாட்டினமே மாட்டினமே நாரப்பய கையுமேலே…

—BGM—

ஆண் : நாடறிஞ்ச அழகிகளா நீங்க எங்க ஜோடி…
உங்களை கட்டிக்கவா வச்சிக்கவா சொல்லிப்புடுங்கடி…

ஆண் : கத்தரிப்பூ ரவுக்க போட்ட சின்னப்பைங்கிளி…
கத்தரிப்பூ ரவுக்க போட்ட சின்னப்பைங்கிளி…
உன்னை கோட்டர்க்கு ஊறுகாயா தொட்டுக்கவாடி…
உன்னை கோட்டர்க்கு ஊறுகாயா தொட்டுக்கவாடி…

—BGM—

ஆண் : குத்துன்னா இப்படித்தான் குத்தனும்…

பெண் : ஆளில்லாத காட்டுக்குள்ள பயலே…
ரவுசு பண்ணும் சின்னத்தம்பி…
நைட் எல்லாம் ஆட்டம் போட்டு…
எனக்கு காலு ரெண்டும் நோகுதடா…
காலு ரெண்டும் நோகுதடா…

—BGM—

ஆண் : அடி ராவெல்லாம் ஆட்டம் போட்டு…
உனக்கு காலு ரெண்டும் இப்போ நொந்தாலென்ன…
இந்த பருவமுள்ள பையங்கிட்ட…
நீயும் பாசாங்கு பண்ணாதடி பண்ணாதடி…

—BGM—

பெண் : பருவமுள்ள பையங்கிட்ட நானும் பாசாங்கு பண்ணவில்ல…
பாசாங்கு பண்ணுரன்டு நீயும் அறிவுகெட்டு பேசாதடா…
நீ அறிவுகெட்டு பேசாதடா…

—-BGM—

ஆண் : அடி மாடி மேலே மாடி வச்சு மாரளவு ஜன்னல் வச்சு…
அப்டி போடு சித்தப்பு…

ஆண் : எட்டி எட்டிப் பாத்தாலுமே…
எரவப்பொண்டாட்டி நீதான்டி…
ஆஹா ஆஹா ஆஹா…

ஆண் : அடி காதறுந்த மூளி…
உன்னைக் கட்டுவண்டி தாலி…
அடி காதறுந்த மூளி…
உன்னைக் கட்டுவண்டி தாலி…

பெண் : அட இந்த பாட்டு படிக்காதடா…
எனக்கு வெக்கம் ஆகுதடா…
ஆண் : ஆமா ஆமா ஆமோய்…

பெண் : பொசக்கெட்ட பயலே உனக்கு…
பொண்டாட்டியும் கேக்குதாடா…

ஆண் : நெத்தியிலே…
பெண் : ஆமோய்…

ஆண் : நெத்தியிலே பொட்டு வச்சு பஞ்சவர்ணம் சேலைகட்டி…
நெத்தியிலே பொட்டு வச்சு பஞ்சவர்ணம் சேலைகட்டி…
மத்தியான வெயிலுக்குள்ளே ஒத்தை வெளியிலே…
மத்தியான வெயிலுக்குள்ளே ஒத்தை வெளியிலே…
நீ மனசு வெறுத்துப் போற காரணம் எனக்குந்தெரியலை…
நீ மனசு வெறுத்துப் போற காரணம் எனக்குந்தெரியலை…

பெண் : கோணாங்கிரப்பு வெட்டி…
குதிங்கால் உயர்த்தி கட்டி…
கோணாங்கிரப்பு வெட்டி…
குதிங்கால் உயர்த்தி கட்டி…
ஆசைகாட்டி மோசஞ்செய்த ஆம்பளை நீங்க…
ஆசைகாட்டி மோசஞ்செய்த ஆம்பளை நீங்க…
உங்களை அறிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க…
உங்களை அறிஞ்சிருந்து நம்புறது எப்படி நாங்க…

ஆண் : அடியே அள்ளி…
பெண் : ஆகான் ஆகான் மாமோய்…

ஆண் : அள்ளி மயிருயர்த்தி ஆதாரமா கொண்டையிட்டு…
அள்ளி மயிருயர்த்தி ஆதாரமா கொண்டையிட்டு…
புள்ளிமானைப் போலத் துள்ளிப் போகும் வழியிலே…
புள்ளிமானைப் போலத் துள்ளிப் போகும் வழியிலே…
உங்களை புரிஞ்சுகிட்ட மனசு சும்மா இருக்க முடியல…
உங்களை புரிஞ்சுகிட்ட மனசு சும்மா இருக்க முடியல…

பெண் : போடா போடா பொடிப்பயலே…
புத்தி கெட்ட மடப்பயலே…
போடா போடா பொடிப்பயலே…
புத்தி கெட்ட மடப்பயலே…
ஈனங்கெட்ட சின்னப்பய என்னென்னமோ பேசுரானே…

பெண் : உனக்கும் எனக்கும் சண்டை…
இப்போ ஒடையப் போகுது மண்டை…
அட உனக்கும் எனக்கும் சண்டை…
இப்போ ஒடையப் போகுது மண்டை…

ஆண் : அடியே குட்டப்புள்ள அண்ணக்கிளி…
கிட்ட வந்து சேதி கேளு…
அடியே குட்டப்புள்ள அண்ணக்கிளி…
கிட்ட வந்து சேதி கேளு…

ஆண் : பொறுப்புடனே நாங்க இருந்தா வெறுப்பு வராது…
பொறுப்புடனே நாங்க இருந்தா வெறுப்பு வராது…
எங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்க விடாது…
எங்களை புரிஞ்சுகிட்டா மனசு சும்மா இருக்கவிடாது…

—BGM—

பெண் : என்ன நாயனகாரரே சும்மா வேடிக்கை…
பாத்துக்கிட்டு இருக்கீயளே…
வாயில வெச்சு ஊதவேண்டியதுதானே…
நீங்க ஊதுரியளா இல்ல நான் ஊதவா…

—BGM—


Notes : Oororam Puliamaram Song Lyrics in Tamil. This Song from Paruthiveeran (2006). Song Lyrics penned by Snehan. ஊரோரம் புளியமரம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading