அறியாத வயசு

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்இளையராஜாயுவன் ஷங்கர் ராஜாபருத்திவீரன்

Ariyadha Vayasu Song Lyrics in Tamil


BGM

ஆண் : அறியாத வயசு புரியாத மனசு…
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்…
அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே…
செடி போல ஆசை முளைக்குதே…
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்…

ஆண் : வெட்டவெளி பொட்டலில மழை வந்தா…
இனி கொட்டாங்குச்சி குடையாக மாறிடும்…
தட்டாம்பூச்சி வண்டியில சீர் வந்தா…
இங்கே பட்டாம்பூச்சி வண்டியில ஊர் வரும்…

ஆண் : ஓஹோ… அறியாத வயசு புரியாத மனசு…
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்…

BGM

ஆண் : பள்ளிக்கூடத்துல பாடம் நடத்தல…
யாரும் மெனக்கெட்டு படிக்கல…
எந்த கிழவியும் சொன்ன கதையில்ல…
காட்டுல மேட்டுல காத்துல கலந்தது…

ஆண் : உறவுக்கு இதுதான் தலைம…
இதை உசுரா நினைக்கும் இளம…
காதலே கடவுளின் ஆண…
அவன் பூமிக்கு தொட்டுவச்ச சேன…

ஆண் : கொடமாத்தி நடமாத்தி அடி ஆத்தி இந்த வயசுல…
அறியாத வயசு புரியாத மனசு…
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்…

BGM

ஆண் : கறந்த பாலையே காம்பில் புகுத்திட…
கணக்கு போடுதே ரெண்டும்தான்…
கோர புல்லில மெட்டி செஞ்சுதான்…
காலுல மாட்டுது தோளுல சாயுது…

ஆண் : ஊரையும் உறவையும் மறந்து…
நடு காட்டுல நடக்குது விருந்து…
நத்தை கூட்டுல புகுந்து…
இனி குடித்தனம் நடத்துமா சேர்ந்து…

ஆண் : அடி ஆத்தி அடி ஆத்தி…
அடி ஆத்தி இந்த வயசுல…
அறியாத வயசு புரியாத மனசு…
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்…

ஆண் : அடி ஆத்தி ரெண்டும் பறக்குதே…
செடி போல ஆசை முளைக்குதே…
ரெண்டும் இங்கே காதல் செய்யும் நேரம்…


Notes : Ariyadha Vayasu Song Lyrics in Tamil. This Song from Paruthiveeran (2006). Song Lyrics penned by Snehan. அறியாத வயசு பாடல் வரிகள்.


Scroll to Top