நினைவுகள் நெஞ்சினில்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சேரன்பரத்வாஜ் & உன்னி மேனன்பரத்வாஜ்ஆட்டோகிராப்

Ninaivugal Nenjinil Song Lyrics in Tamil


BGM

ஆண் : நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்…
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்…
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்…
கண்ணீா் விட்டு கண்ணீா்விட்டு அழிக்கின்றேன்…

ஆண் : தாய் தந்தைக்காக எனைப் பிாிய…
காதலை காகிதமாய் தூக்கி எாிய…
பெண்ணே உன்னால் முடிகிறதே…
என்னால் ஏனோ முடியவில்லை…
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை…
காரணம் கேட்டால் தொியவில்லை…

ஆண் : நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்…
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்…
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்…
கண்ணீா் விட்டு கண்ணீா்விட்டு அழிக்கின்றேன்…

BGM

ஆண் : காத்திருந்து காத்திருந்து பழகியவன்…
நீ என்னை கடக்கின்ற ஒரு நொடிக்காக…
காத்திருந்து காத்திருந்து பழகியவன்…

ஆண் : கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்…
நீ என்னை காதலிக்க உன் தாய்மொழியை…
கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு பேசியவன்…

ஆண் : நொடிகள் எல்லாம் நோய்பட்டு…
எனை சுமந்து போக மறுக்கிறதே…
மொழிகள் எல்லாம் முடமாகி…
என் மெளனத்தைக் கூட எாிக்கிறதே…

ஆண் : சுவாசிக்க கூட முடியவில்லை…
எனை வாசிக்க மண்ணில் எவருமில்லை…
என்னை எனக்கே பிடிக்கவில்லை…
காரணம் கேட்டால் தொியவில்லை…

ஆண் : நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்…
நெருப்பால் எந்தன் நெஞ்சை சுடுகின்றேன்…
உன் உருவம் கண்களிலே பதிந்ததினால்…
கண்ணீா் விட்டு கண்ணீா்விட்டு அழிக்கின்றேன்…

ஆண் : தாய் தந்தைக்காக எனைப் பிாிய…
காதலை காகிதமாய் தூக்கி எாிய…
பெண்ணே உன்னால் முடிகிறதே…
என்னால் ஏனோ முடியவில்லை…
எனக்கே எனக்கே என்னைப் பிடிக்கவில்லை…
காரணம் கேட்டால் தொியவில்லை…

BGM


Notes : Ninaivugal Nenjinil Song Lyrics in Tamil. This Song from Autograph (2004). Song Lyrics penned by Cheran. நினைவுகள் நெஞ்சினில் பாடல் வரிகள்.


Scroll to Top