ஆறடி சுவருதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிகே.ஜே. யேசுதாஸ் & சுவர்ணலதாஇளையராஜாஇது நம்ம பூமி

Aaradi Chuvaru Thaan Song Lyrics in Tamil


ஆண் : ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா…
கிளியே தந்தன கிளியே…
கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம்…
கிளியே தந்தன கிளியே…

ஆண் : காட்டாறும் இளங்குயில்களின் பாட்டாறும்…
காவல் ஏற்குமோ காதல் தோற்குமோ…

ஆண் : ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா…
கிளியே தந்தன கிளியே…
கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம்…
கிளியே தந்தன கிளியே…

BGM

ஆண் : ஆழ்கடல் அலைகளும் ஓயுமோ…
பிறர் ஆணையால்… ஓ…
பூமியில் மலைகளும் சாயுமோ…
வெறும் சூறையால்… ஓ…

ஆண் : காவல் தனை தாண்டியே…
காதல் இசை தீண்டுமே…
நீ எங்கே ஓ… நான் அங்கே… ஹோஓ ஹோஓ ஹோஓ…

ஆண் : ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா…
கிளியே தந்தன கிளியே…
கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம்…
கிளியே தந்தன கிளியே…

BGM

பெண் : ராத்திரி வலம் வரும் பால் நிலா…
என்னை வாட்டுதே… ஓ…
நேத்திரம் துயில் கொள்ளும் வேளையில்…
அனல் மூட்டுதே… ஓ…

பெண் : வாடும் மலர் தோரணம்…
நீயும் இதன் காரணம்…
நீ எங்கே ஓ… நான் அங்கே… ஹோஓ ஹோஓ ஹோஓ…

பெண் : ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா…
கிளியே தந்தன கிளியே…
கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம்…
கிளியே தந்தன கிளியே…

BGM

பெண் : வானெல்லாம் நிலம் வளம்…
நீரெல்லாம் உன்னை பார்க்கிறேன்… ஓ…

ஆண் : காத்திரு நலம் பெறும் நாள் வரும்…
சிறை மீட்கிறேன்… ஓ…

பெண் : போதும் படும் வேதனை…
காதல் தரும் சோதனை…

ஆண் : நீ எங்கே ஓ… நான் அங்கே… ஹோஓ ஹோஓ ஹோஓ…

பெண் : ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா…
கிளியே தந்தன கிளியே…

ஆண் : கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம்…
கிளியே தந்தன கிளியே…

பெண் : காட்டாறும் இளங்குயில்களின் பாட்டாறும்…
ஆண் : காவல் ஏற்குமோ காதல் தோற்குமோ…

ஆண் : ஆறடி சுவருதான் ஆசையை தடுக்குமா…
கிளியே தந்தன கிளியே…
கோட்டையை எழுப்பலாம் பாதையை மறைக்கலாம்…
கிளியே தந்தன கிளியே…


Notes : Aaradi Chuvaru Thaan Song Lyrics in Tamil. This Song from Idhu Namma Bhoomi (1992). Song Lyrics penned by Vaali. ஆறடி சுவருதான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading