ஒரு போக்கிரி ராத்திரி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & சுவர்ணலதாஇளையராஜாஇது நம்ம பூமி

Oru Pokiri Raathiri Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஒரு போக்கிரி ராத்திரி பார்க்குற பார்வைதான்…
உன்ன தாக்குது கேக்குது பூக்குது ஆசைதான்…

ஆண் : பிறக்குது சபலம் சபலம்…
கொடுப்பது சுலபம் சுலபம்…
மனக் காயங்கள் ஆறாதோ காதலால்தான்…
ஒரு ஆறுதல் கூறினேன் ஆதலால்தான்…

ஆண் : ஒரு போக்கிரி ராத்திரி பார்க்குற பார்வைதான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : கல்லூரி வாசலிலே நட்டு வைத்த காதல் விதை…
காயாகி கனிந்து வரும் காலம் உள்ள காலம் வரை…

பெண் : கல்யாணப் பந்தலுக்கு காத்திருக்கும் வாழை இது…
கண்ணா உன் கை அணைக்க பூத்திருக்கும் தாழை இது…

ஆண் : சிங்கார மேனிதான் சொக்க வெள்ளி பாற்குடம்…
பெண் : சிந்தாமல் நீ இதை அள்ளுகின்ற நாள் வரும்…

ஆண் : எப்போது ஆரம்பம் அந்தப்புர நாடகம்…
பெண் : ஏன் இந்த தாமதம் என்ன சொல்ல காரணம்…

ஆண் : காத்திரு கண்ணே கொடி நாட்டலாம்… ஹோய்…
பெண் : காதலே வெல்லும் என காட்டலாம்… ஹோய்…

ஆண் : ஒரு போக்கிரி ராத்திரி பார்க்குற பார்வைதான்…
பெண் : உன்ன தாக்குது கேக்குது பூக்குது ஆசைதான்…

BGM

பெண் : என்னோடு நீ இருந்தால் நெஞ்சுக்கொரு நிம்மதிதான்…
இல்லாமல் தனித்திருந்தால் அம்பு பட்ட பைங்கிளிதான்…

ஆண் : எப்போதும் என் மனது உன்னைச் சுற்றி கோலம் இடும்…
தன்னந்தனி என்றிருந்தால் தத்தளித்து ஓலம் இடும்…

பெண் : என் கூந்தல் வேண்டுது உன்னுடைய பூச்சரம்…
எந்நாளில் கை வரும் உன்னுடைய மோதிரம்…

ஆண் : என் தேகம் யாவுமே உன்னுடைய சீதனம்…
பார்த்தாலும் தீருமோ உன் அழகு நூதனம்…

பெண் : காதலால் கூவும் ஒரு பூங்குயில்… ஹோய்…
ஆண் : பூங்குயில் மேவும் இளம் ஆண் குயில்… ஹோய்…

பெண் : ஒரு போக்கிரி ராத்திரி பார்க்குற பார்வைதான்…
உன்ன தாக்குது கேக்குது பூக்குது ஆசைதான்…

பெண் : பிறக்குது சபலம் சபலம்…
கொடுப்பது சுலபம் சுலபம்…
மனக் காயங்கள் ஆறாதோ காதலால்தான்…
ஒரு ஆறுதல் கூறினேன் ஆதலால்தான்…

ஆண் : ஒரு போக்கிரி ராத்திரி பார்க்குற பார்வைதான்…
பெண் : உன்ன தாக்குது கேக்குது பூக்குது ஆசைதான்…


Notes : Oru Pokiri Raathiri Song Lyrics in Tamil. This Song from Idhu Namma Bhoomi (1992). Song Lyrics penned by Vaali. ஒரு போக்கிரி ராத்திரி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading