தமிழ் பசங்க

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்பென்னி டயல், ஷீசே & சைக்கோ யூனிட்ஜி. வி. பிரகாஷ் குமாா்தலைவா

Tamil Pasanga Song Lyrics in Tamil


ஆண் : ததததத தமிழா… ததததத தமிழா…

ஆண் : ததததத தமிழா… ததததத தமிழா…
ததததத தமிழா… ததததத தமிழா…
தமிழா தமிழா… தமிழா தமிழா…
தமிழா தமிழா…

ஆண் : பயணம் தொடரும் தலைகணமும் அடங்கும்…
அரங்கம் அதிரும் தருணம் அரங்கேற்றம் முடியட்டும்…
விடியும்பொழுதும் எனக்கென உதயமாகட்டும்…
அதிரடி நடனமும் எரிமலை வெடிக்கட்டும்…
புகழது பரவட்டும் தமிழா தமிழா…
உயர நீ பறந்திடு தமிழா தமிழா…
த மிழ் ப ச ங்க…

ஆண் : அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஓள…
அக்கன்னா…
கசட தபற யரல வழல ஙஞண நமன…
தமிழன் நான்…

ஆண் : எங்கிருந்தாலும் ஓ…
நாங்க என்ன செஞ்சாலும் ஓ…
தமிழோடுதானே ஓ…
எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா…

குழு : பசங்க பசங்க தமிழ் தமிழ் பசங்க…
பசங்க பசங்க தமிழ் தமிழ் பசங்க…
இந்த பூமியை அதிரவைப்போமே…
நாங்க தமிழ் பசங்க…

—BGM—

ஆண் : திருநெல்வேலி அல்வா…
தென் மதுரை மல்லி பூவு…
சென்னை கானா பாட்டு…
நாங்க ரசிப்போம்…

—BGM—

ஆண் : காஞ்சி பட்டு சேல…
பசு மாடு சுத்தும் சாலை…
நாத்து நடும் வேளை…
பாட்டு படிப்போம்…

ஆண் : எங்கள் மயிலாட்டமும்…
கொஞ்சும் குயிலாட்டமும்…
கோவில் கரகாட்டமும் அதிரும்…

ஆண் : எங்கள் தெரு கூத்திலும்…
எங்கள் எச பாட்டிலும்…
மெல்லிசைகள் துள்ளி வரும் வா வா வா…

குழு : பசங்க பசங்க தமிழ் தமிழ் பசங்க…
பசங்க பசங்க தமிழ் தமிழ் பசங்க…
இந்த பூமியை அதிரவைப்போமே…
நாங்க தமிழ் பசங்க…

—BGM—

ஆண் : அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஓள…
அக்கன்னா…
கசட தபற யரல வழல ஙஞண நமன…
தமிழன் நான்…

ஆண் : வாட்ச் மீ ரன் லைக் ஆ ரெண்டு காலு குதிர…
ஆழம் தெரியாம மச்சி கால நீயும் விடுர…
ஆட்டம் போடும் போது நாங்க தங்கமான பசங்க…
போட்டின்னு வந்திட்டா கிழிக்கும் தமிழ் பசங்க…
புலியும் பதுங்கும் நம்ம தலைவனை கண்டா…
போட்டிக்கு யாரு தம்பி நமக்கு இப்போ எதிரா…
என் ஒவ்வொரு அசைவும் நடனம் அமைக்கும் பாரடா…
ஊருக்குள்ள நம்மபோல செல்லபுள்ள யாருடா…

—BGM—

ஆண் : பூப்போல் இட்லி தோச…
அட முறுக்கி வச்ச மீச…
கூழ குடிக்க ஆச பச்ச தமிழன்…

—BGM—

ஆண் : வெளுத்து வச்ச வேட்டி…
பல கதைகள் சொல்லும் பாட்டி…
கபடி கபடி போட்டி வீர தமிழன்…

ஆண் : கண்ணாமூச்சி ஆடுவோம்…
ஜல்லி கட்டாடுவோம்…
வெற்றி கொடி நாட்டுவோம் தமிழா…

ஆண் : சங்க தமிழ் பாட்டிலும்…
திருக்குறல் ஏட்டிலும்…
முக்குளித்து மூழ்கி விட வா வா வா…

—BGM—

ஆண் : அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஓள…
அக்கன்னா…
கசட தபற யரல வழல ஙஞண நமன…
தமிழன் நான்…

ஆண் : எங்கிருந்தாலும் ஓ…
நாங்க என்ன செஞ்சாலும் ஓ…
தமிழோடுதானே ஓ…
எங்க சந்தோஷம் சங்கீதம் வா வா வா…

குழு : பசங்க பசங்க தமிழ் தமிழ் பசங்க…
பசங்க பசங்க தமிழ் தமிழ் பசங்க…
இந்த பூமியை அதிரவைப்போமே…
நாங்க தமிழ் பசங்க…


Notes : Tamil Pasanga Song Lyrics in Tamil. This Song from Thalaivaa (2013). Song Lyrics penned by Na. Muthukumar. தமிழ் பசங்க பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading