ஸ்வாசமே ஸ்வாசமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்எஸ். பி. பாலசுப்ரமணியம் & சாதனா சர்கம்ஏ.ஆர்.ரகுமான்தெனாலி

Swasame Song Lyrics in Tamil


பெண் : என்ன சொல்லி என்னைச் சொல்ல…
காதல் என்னைக் கையால் தள்ள…
என்ன சொல்லி என்னைச் சொல்ல…
காதல் என்னைக் கையால் தள்ள…
இதயம்தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல…

பெண் : ஸ்வாசமே… ஸ்வாசமே…

—BGM—

ஆண் : ஜன்னல் காற்றாகி வா…
ஜரிகைப் பூவாகி வா…
மின்னல் மழையாகி வா…
உயிரின் மூச்சாகி வா…

ஆண் : ஜன்னல் காற்றாகி வா…
ஜரிகைப் பூவாகி வா…
மின்னல் மழையாகி வா…
உயிரின் மூச்சாகி வா…

பெண் : ஸ்வாசமே ஸ்வாசமே…
ஸ்வாசமே ஸ்வாசமே…

பெண் : என்ன சொல்லி என்னைச் சொல்ல…
காதல் என்னைக் கையால் தள்ள…
என்ன சொல்லி என்னைச் சொல்ல…
காதல் என்னைக் கையால் தள்ள…
இதயம்தான் சரிந்ததே உன்னிடம் மெல்ல…

ஆண் : வாசமே வாசமே…
வாசமே வாசமே…

ஆண் : என்ன சொல்லி என்னைச் சொல்ல…
கண்கள் ரெண்டில் கண்கள் செல்ல…
சிறகுகள் முளைக்குதே மனசுக்குள் மெல்ல…

ஆண் : ஜன்னல் காற்றாகி வா…
ஜரிகைப் பூவாகி வா…
மின்னல் மழையாகி வா…
உயிரின் மூச்சாகி வா…

—BGM—

பெண் : இடது கண்ணாலே அகிம்சைகள் செய்தாய்…
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்…
இடது கண்ணாலே அகிம்சைகள் செய்தாய்…
வலது கண்ணாலே வன்முறை செய்தாய்…

ஆண் : ஆறறிவோடு உயிரது கொண்டேன்…
ஏழாம் அறிவாக காதல் வரக் கண்டேன்…

பெண் : இயற்கையின் கோளாறில் இயங்கிய என்னை…
செயற்கைக் கோளாக உன்னைச் சுற்றச் வைத்தாய்…

ஆண் : அணுசக்திப் பார்வையில் உயிர்சக்தி தந்தாய்…
பெண் : அணுசக்திப் பார்வையில் உயிர்சக்தி தந்தாய்…

பெண் : ஸ்வாசமே ஸ்வாசமே…

—BGM—

ஆண் : இசைத்தட்டு போலே இருந்த என் நெஞ்சை…
பறக்கும் தட்டாக பறந்திடச் செய்தாய்…

பெண் : நதிகளில்லாத அரபு தேசம் நான்…
நைல் நதியாக எனக்குள்ளே வந்தாய்…

ஆண் : நிலவு இல்லாத புதன் கிரகம் நானே…
முழு நிலவாக என்னுடன் சேர்ந்தாய்…

பெண் : எனக்காக நீ கிடைத்தாய்…
விடிந்து விட்டேனே…

ஆண் : வாசமே வாசமே…
பெண் : என்ன சொல்லி…
ஆண் : என்ன சொல்லி என்னைச் சொல்ல…
பெண் : காதல் என்னை கையால் தள்ள…

—BGM—

ஆண் : ஜன்னல் காற்றாகி வா…
ஜரிகைப் பூவாகி வா…
மின்னல் மழையாகி வா…
உயிரின் மூச்சாகி வா…

ஆண் : ஜன்னல் காற்றாகி வா…
ஜரிகைப் பூவாகி வா…
மின்னல் மழையாகி வா…
உயிரின் மூச்சாகி வா…

ஆண் : ஜன்னல் காற்றாகி வா…
பெண் : ஸ்வாசமே ஸ்வாசமே…
ஆண் : ஜரிகைப் பூவாகி வா…
மின்னல் மழையாகி வா…
உயிரின் மூச்சாகி வா…

ஆண் : வாசமே…


Notes : Swasame Song Lyrics in Tamil. This Song from Thenali (2000). Song Lyrics penned by Pa. Vijay. ஸ்வாசமே ஸ்வாசமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading