திறக்காத காட்டுக்குள்ளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துபி. உன்னிகிருஷ்ணன் & கே.எஸ். சித்ராஏ.ஆர்.ரகுமான்என் சுவாசக் காற்றே

Thirakkadha Kaatukulle Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ம்ம்ம்… திறக்காத காட்டுக்குள்ளே…
பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்…
பறந்தோடும் மானைப் போல…
தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்…

பெண் : பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி…
வட்டம் போடும் பட்டாம்பூச்சி…
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு…

பெண் : ஓடியோடி ஆலம் விழுதில்…
ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே…
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்லு…

ஆண் : அந்த வானம் பக்கம்…
இந்த பூமி சொர்க்கம்…
காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்…

ஆண் : நெஞ்சில் ஏக்கம் வந்தால்…
கண்ணில் தூக்கம் வந்தால்…
பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்…

ஆண் : திறக்காத காட்டுக்குள்ளே…
பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்…
பறந்தோடும் மானைப் போல…
தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்…

—BGM—

பெண் : காற்றோடு மூங்கில் காடு என்ன பேசுதோ…
மண்ணோடு விழிகிற அருவி என்ன சொல்லுதோ…
அது தன்னைச் சொல்லுதோ…
இல்லை உன்னைச் சொல்லுதோ…

பெண் : அட புல்வெளியில் ஒரு வானவில் விழுந்தது…
அதோ அதோ அதோ அங்கே…
ஐயையோ வானவில் இல்லை வண்ணச் சிறகுகளோ…
அவை வண்ணச் சிறகுகளோ…
வானவில் பறக்கின்றதோ…

ஆண் : அழகு அங்கே இங்கே சிரிக்கின்றது…
புதிய கண்கள் நெஞ்சில் திறக்கின்றது…

ஆண் : மேகம்போல் காட்டை நேசி…
மீண்டும் நாம் ஆதிவாசி…
உன் கண்கள் மூடும் காதல்…
காதல் காதல் காதல் காதல் யோசி…

ஆண் : திறக்காத காட்டுக்குள்ளே…
பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்…
பறந்தோடும் மானைப் போல…
தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்…

பெண் : பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி…
வட்டம் போடும் பட்டாம்பூச்சி…
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு…

பெண் : ஓடியோடி ஆலம் விழுதில்…
ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே…
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்லு…

ஆண் : அந்த வானம் பக்கம்…
இந்த பூமி சொர்க்கம்…
காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்…

ஆண் : நெஞ்சில் ஏக்கம் வந்தால்…
கண்ணில் தூக்கம் வந்தால்…
ஆண் & பெண் : பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்…

—BGM—

பெண் : கை தொட்டுத் தட்டித் தட்டி பூவை எழுப்பு…
காற்றோடு ரகசிய மொழிகள் சொல்லியனுப்பு…
அட என்ன நினைப்பு…
அதைச் சொல்லியனுப்பு…

பெண் : என் காலடியில் சில வீடுகள் நகருது…
இதோ இதோ இதோ இதோ இங்கே…
ஆஹாஹா… வீடுகள் இல்லை நத்தைக் கூடுகளோ…
அவை நத்தைக் கூடுகளோ…
வீடுகள் இடம் மாறுமோ…

ஆண் : புதிய வாழ்க்கை நம்மை அழைக்கின்றது…
மனித வாழ்க்கை அங்கே வெறுக்கின்றது…

ஆண் : நாட்டுக்குப் பூட்டு போடு…
காட்டுக்குள் ஓடியாடு…
பெண்ணே என் மார்பின் மீது கோலம் போடு…

ஆண் & பெண் : திறக்காத காட்டுக்குள்ளே…
பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்…
பறந்தோடும் மானைப் போல…
தொலைந்தோடிப் போனது எங்கள் நாணம்…

பெண் : பட்டாம்பூச்சி பட்டாம்பூச்சி…
வட்டம் போடும் பட்டாம்பூச்சி…
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு…

பெண் : ஓடியோடி ஆலம் விழுதில்…
ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே…
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்லு…

ஆண் : திறக்காத காட்டுக்குள்ளே…
பிறக்காத பிள்ளைகள் போலே…
பறந்தோடும் மானைப் போல…
தொலைந்தோடிப் போனது எங்கள்…

—BGM—


Notes : Thirakkadha Kaatukulle Song Lyrics in Tamil. This Song from En Swasa Kaatre (1999). Song Lyrics penned by Vairamuthu. திறக்காத காட்டுக்குள்ளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading