ஓ ப்ரியா ப்ரியா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிமனோ & கே.எஸ். சித்ராஇளையராஜாஇதயத்தை திருடாதே

Oh Priya Priya Song Lyrics in Tamil


ஆண் : ஓ ப்ரியா ப்ரியா…
என் ப்ரியா ப்ரியா…
ஏழை காதல் வாழுமோ…
இருளும் ஒளியும் சேருமோ…
நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம்…
கானல் நீரால் தாகம் தீராது…

பெண் : ஓ ப்ரியா ப்ரியா…
உன் ப்ரியா ப்ரியா…
ஓ ப்ரியா ப்ரியா…
உன் ப்ரியா ப்ரியா…

பெண் : இணைந்திடாது போவதோ…
வானம் பூமி ஆவதோ…
காலம் சிறிது காதல் மனது…
தேவன் நீதான் போனால் விடாது…

ஆண் : தேடும் கண்களே…
தேம்பும் நெஞ்சமே…
வீடும் பொய்யடி…
வாழ்வும் பொய்யடி…

BGM

பெண் : அன்பு கொண்ட கண்களும்…
ஆசை கொண்ட நெஞ்சமும்…
ஆணையிட்டு மாறுமோ…
பெண்மை தாங்குமோ…

ஆண் : ராஜ மங்கை கண்களே…
என்றும் என்னை மொய்ப்பதோ…
வாடும் ஏழை இங்கு ஓர்…
பாவி அல்லவோ…

பெண் : எதனாலும் ஒரு நாளும்…
மறையாது பிரேமையும்…

ஆண் : எரித்தாலும் மரித்தாலும்…
விலகாத பாசமோ…

பெண் : கன்னி மானும் உன்னுடன்…
கலந்ததென்ன பாவமோ…
காதல் என்ன காற்றிலே குலைந்து…
போகும் மேகமோ…
அம்மாடி நான் ஏங்கவோ…
ஓ நீ வா வா…

ஆண் : ஓ ப்ரியா ப்ரியா…
என் ப்ரியா ப்ரியா…

பெண் : ஓ ப்ரியா ப்ரியா…
உன் ப்ரியா ப்ரியா…

BGM

பெண் : காளிதாசன் ஏடுகள்…
கண்ணன் ராசலீலைகள்…
பருவமோகம் தந்தது…
பாவம் அல்லவே…

ஆண் : ஷாஜகானின் காதலி…
தாஜ்மஹால் பூங்கிளி…
பாசம் வைத்த பாவம்தான்…
சாவும் வந்தது…

பெண் : இறந்தாலே இறவாது விளைகின்ற பிரேமையே…
ஆண் : அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே…

பெண் : விழியில் பூக்கும் நேசமாய்…
புனிதமான பந்தமாய்…
பேசும் இந்த பாசமே…
இன்று வெற்றி கொள்ளுமே…
இளங்கன்னி உன்னுடன் கூட வா வா…

ஆண் : ஓ ப்ரியா ப்ரியா…
என் ப்ரியா ப்ரியா…

பெண் : ஓ ப்ரியா ப்ரியா…
உன் ப்ரியா ப்ரியா…

ஆண் : ஏக்கம் என்ன பைங்கிளி…
என்னை வந்து சேரடி…

பெண் : நெஞ்சிரண்டு நாளும் பாட…
காவல்தாண்டி பூவை இங்காட…

பெண் : காதல் கீர்த்தனம்…
காணும் மங்களம்…
பிரேமை நாடகம்…
பெண்மை ஆடிடும்…


Notes : Oh Priya Priya Song Lyrics in Tamil. This Song from Idhayathai Thirudathe (1989). Song Lyrics penned by Vaali. ஓ ப்ரியா ப்ரியா பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top