ஆலங்கட்டி மழை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கலை குமார்கமல்ஹாசன், ஸ்ரீனிவாஸ், சுஜாதா மோகன், பேபி சிலோனோ ராத் & பேபி சரண்யா ஸ்ரீனிவாஸ்ஏ.ஆர்.ரகுமான்தெனாலி

Alangatti Mazhai Song Lyrics in Tamil


குழு : ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா…
டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா…

BGM

பெண் : ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா…
டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா…
சமரசம் செய்ய சந்திரன் வந்தாச்சா…
சின்ன சின்ன சண்டை சமாதானமாச்சா…

ஆண் : இப்ப பழச மறந்து கதைக்க வந்தாச்சு…
என்ற விசனம் மறந்து காத்தோடு போயாச்சு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு : ஐயோடா இது நிரந்தரம் என நிலைச்சு இருக்கணும்…
ஐயோடா இது நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணும்…
ஐயோடா…

BGM

ஆண் : குளம் காட்டும் வெண்ணிலவாய்…
அழகான நம் குடும்பம்…
கல் ஒன்று விழுவதால் கலையலாமா…

பெண் : கல் ஒன்று விழுவதினால்…
தண்ணீரில் நெளி நெளியாய்…
அலைபோடும் ஓவியத்தை ரசிக்கலாமே…

ஆண் : சித்தன வாசல் சிற்பங்கள்…
பக்கம் வெறும் பாறை ஏனோ…

பெண் : அன்பென்னும் உளி பட்டதால்…
பாறை சிலை ஆகுமே…

ஆண் : பிட்டு குழலுக்கு தேங்காய் பூவ போல…
ஹேஹா… ஒன்னா கலந்திட நெஞ்சு துடிக்குது…

BGM

ஆண் : பி பி பி பிட்டு குழலுக்கு தேங்காய் பூவ போல…
ஒன்னா கலந்திட நெஞ்சு துடிக்குது…

பெண் : சொந்தத்தை தினம் சந்திக்க…
அவர் நிழல் கூட ஏங்குது அம்மா…

குழு : ஐயோடா இது நிரந்தரம் என நிலைச்சு இருக்கணும்…
ஐயோடா இது நிலைச்சிட ஒரு வரம் கிடைக்கணும்…
ஐயோடா…

BGM

பெண் : ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்தாச்சா…
டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்தாச்சா…

BGM

பெண் : ஆற்றோட நாணல் அது…
காற்றோடு கை குலுக்க…
நட்போடு நாமும் அதை கொஞ்சலாம் நில்…

ஆண் : பனையில் பழம் பறிச்சு…
விதையில் தென்ன வளர்க்க…
ஆறேனும் ஆசைபட்டால் ஆகுமோ சொல்…

பெண் : ஒருவர் புன்னகை மற்றவர் முகம் அதில் பூக்குமே…
ஆண் : உள்ளங்கையின்ற ரேகைகள் பலன் ஒன்றாகுமே…

பெண் : அனைவரும் இங்கு நடந்திடும் போது…
ஒரு நிழல் மட்டும் தெரிவதென்ன…

ஆண் : கவிதை போல் உள்ள குடும்பத்தில்…
நானுமொரு வார்த்தை ஆகலாமோ…

ஆண் : ஆஆஆ… ஆலங்கட்டி மழை தாலாட்ட வந்துட்டுது…
டூ விட்ட மனசு பழம் விட்டு சேர்ந்துட்டுது…

ஆண் : சமரசம் செய்ய சந்திரன் வந்தானே…
சின்ன சின்ன சண்டை சமாதானம்தானே…

பெண் : துள்ளி குதிச்சு குதிச்சு கொறையுது வயசு…
இப்போ சிரிக்க சிரிக்க நோய் எல்லாம் போயாச்சு…

குழு : அய்யோடா…
ஆண் : இது கனவில்லை எண்டு காதில் சொல்லுங்கோவன்…
குழு : அய்யோடா…
ஆண் : இது நிரந்தரம் எண்டு வரம் தாருங்கோவன்…
குழு : அய்யோடா…


Notes : Alangatti Mazhai Song Lyrics in Tamil. This Song from Thenali (2000). Song Lyrics penned by Kalaikumar. ஆலங்கட்டி மழை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading