சுற்றும் பூமி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிணிகார்த்திக் ராஜாடும் டும் டும்

Suttrum Bhoomi Song Lyrics in Tamil


BGM

பெண் : அத்திரி பத்திரி சாலு…
நான் கத்திரி கத்திரி கோலு…
எந்திரி எந்திரி வாலு…
நான் முந்திரி முந்திரி சாறு…

பெண் : தில்லாலங்கடி… அடி தில்லாலங்கடி…
ஹேய் தில்லாலங்கடி… அடி தில்லாலங்கடி…

பெண் : சுற்றும் பூமி சுற்றும்…
அதன் சக்கரம் தேய்ந்து விடாதே…
பட்டம் பறக்கும் கயிறு…
ஒரு வானவில் ஆகிவிடாதே…

பெண் : சட்டபையில் உலகம் கைக்குட்டையில் வானம்…
கட்டளை இட்டதும் கேட்கும்…
யே… தென்னை மரமே தென்னை மரமே…
உடம்பில் வளையல்கள் ஏனோ…
திருமணம் உனக்குதானோ…

குழு : அத்திரி பத்திரி… அத்திரி பத்திரி…
ஹேய் அத்திரி பத்திரி…
அடி அத்திரி பத்திரி… ஹேய்…

பெண் : திரிதிரி பொம்மைகாரி…
நான் தில்லாலங்கடி முல்ல…
சேதாரத்தை பார்த்தா…
அட தங்க தீவு இல்ல

பெண் : தில்லாலங்கடி…
குழு : தில்லாலங்கடி…
பெண் : தில்லாலங்கடி…

BGM

பெண் : பறக்கும் பட்டாம் பூச்சி பறக்கும்…
விண்ணில் இல்லை கட்டணம்…
பத்தியம் பத்தாயத்தில் பத்தியம் படறாதே…

பெண் : அஞ்சறை பெட்டி அறை போலே…
நெஞ்சுக்குள் அறைகள் வச்சிருக்கேன்…
ஆசைகள் அதிலே ஒளிச்சிருக்கேன் அலை அலையாய்…

பெண் : நெருப்பின் கால் மேலேதான்…
நீரின் கால் கீழே…
என் கால்கள் மேலா கீழா…
எவர் சொல்வார் இங்கே…

பெண் : சுற்றும் பூமி சுற்றும்…
அதன் சக்கரம் தேய்ந்து விடாதே…
பட்டம் பறக்கும் கயிறு…
ஒரு வானவில் ஆகிவிடாதே…

குழு : அத்திரி பத்திரி… ஹேய் அத்திரி பத்திரி…
ஹேய் அத்திரி பத்திரி… அடி அத்திரி பத்திரி…

BGM

குழு : காலை நாலு மணிக்கு படுப்பா…
உடனே அஞ்சு மணிக்கு முழிப்பா…
அடடா ஆறு தடவை குளிப்பா…
ஏழு எட்டு பெறுவா…

குழு : அக்கா புருஷன் அரை புருஷன்…
சக்காலத்தி நானும் இருக்கேன்…
சொக்க மட்டும் நீயும் துவைப்பே போக வேணும்…

குழு : பாவம் தான்…
பெண் : உன் மாமன்…
குழு : பால் வாங்கி…
பெண் : கொடுப்பான்…
குழு : பகல் இரவு…
பெண் : பார்க்காம பக்கத்தில்…
குழு : இருப்பான்…

பெண் : சுற்றும் பூமி சுற்றும்…
அதன் சக்கரம் தேய்ந்து விடாதே…
பட்டம் பறக்கும் கயிறு…
ஒரு வானவில் ஆகிவிடாதே…

பெண் : சட்டபையில் உலகம் கைக்குட்டையில் வானம்…
கட்டளை இட்டதும் கேட்கும்…
யே… தென்னை மரமே தென்னை மரமே…
உடம்பில் வளையல்கள் ஏனோ…
திருமணம் உனக்குதானோ…

குழு : அத்திரி பத்திரி… அத்திரி பத்திரி ஹேய்…
அத்திரி பத்திரி… அடி அத்திரி பத்திரி ஹேய்…

பெண் : திரிதிரி பொம்மைகாரி…
நான் தில்லாலங்கடி முல்ல…
சேதாரத்தை பார்த்தா…
அட தங்க தீவு இல்ல…

பெண் : தில்லாலங்கடி…
குழு : தில்லாலங்கடி…
பெண் : அடி தில்லாலங்கடி…
குழு : தில்லாலங்கடி…

BGM


Notes : Suttrum Bhoomi Song Lyrics in Tamil. This Song from Dum Dum Dum (2001). Song Lyrics penned by Na. Muthukumar. சுற்றும் பூமி பாடல் வரிகள்.


Scroll to Top