ரகசியமாய்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்ஹரிஹரன், ராமநாதன் & சாதனா சர்கம்கார்த்திக் ராஜாடும் டும் டும்

Ragasiyamai Song Lyrics in Tamil


BGM

பெண் : ரகசியமாய் ரகசியமாய்…
புன்னகைத்தால் பொருள் என்னவோ…
ரகசியமாய் ரகசியமாய்…
புன்னகைத்தால் பொருள் என்னவோ…

ஆண் : சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்…
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்…
இலை வடிவில் இதயம் இருக்கும்…
மலை வடிவில் அதுவும் கனக்கும்…

ஆண் : சிரித்து சிரித்து சிறையிலே…
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்…
ஓ ஹோ ஹோ… ஓ ஹோ ஹோ…
ஓ ஹோ ஹோ… ஓ ஹோ ஹோ…

BGM

பெண் : நிலம் நீர் காற்றிலே…
மின்சாரங்கள் பிறந்திடும்…
காதல் தரும் மின்சாரமோ…
பிரபஞ்சத்தைக் கடந்திடும்…

BGM

ஆண் : நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்…

பெண் : நிஜமாய் நீ என்னைத் தீண்டினால்…
பனியாய் பனியாய் உறைகிறேன்…

ஆண் : ஒளியாய் நீ என்னைத் தீண்டினால்…
நுரையாய் உன்னுள் கரைகிறேன்…

பெண் : காதல் வந்தாலே வந்தாலே…
ஏனோ உளறல்கள்தானோ…

ஆண் : ஓ ஹோ ஹோ… ஓ ஹோ ஹோ…

ஆண் : அவசரமாய் அவசரமாய்…
மொழி தொலைந்தால் பொருள் என்னவோ…

BGM

பெண் : வெள்ளித் தரைப் போலவே…
என் இதயம் இருந்ததே…
மெல்ல வந்து உன் விரல்…
காதல் என்று எழுதுதே…

BGM

ஆண் : ஒரு நாள் காதல் என் வாசலில்…

ஆண் : ஒரு நாள் காதல் என் வாசலில்…
வரவா வரவா கேட்டது…
மறுநாள் காதல் என் வீட்டுக்குள்…
அடிமை சாசனம் மீட்டுது…

ஆண் : அதுவோ அது இதுவோ…
இது எதுவோ அதுவே நாம் அறியோமே…
ஓ ஹோ ஹோ… ஓ ஹோ ஹோ…

பெண் : ரகசியமாய் ரகசியமாய்…
புன்னகைத்தால் பொருள் என்னவோ…

ஆண் : அவசரமாய் அவசரமாய்…
மொழி தொலைந்தால் பொருள் என்னவோ…

பெண் : சொல்லத் துடிக்கும் வார்த்தை கிரங்கும்…
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்…
இலை வடிவில் இதயம் இருக்கும்…
மலை வடிவில் அதுவும் கனக்கும்…

ஆண் : சிரித்து சிரித்து சிறையிலே…
சிக்கிக் கொள்ள அடம் பிடிக்கும்…
ஓ ஹோ ஹோ… ஓ ஹோ ஹோ…
ஓ ஹோ ஹோ… ஓ ஹோ ஹோ…


Notes : Ragasiyamai Song Lyrics in Tamil. This Song from Dum Dum Dum (2001). Song Lyrics penned by Na. Muthukumar. ரகசியமாய் பாடல் வரிகள்.


Scroll to Top