ஸ்டைலு ஸ்டைலுதான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிதேவாபாட்ஷா

Style Style Thaan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹே ஹே…
பெண் : ஸ்டைல் ஸ்டைல்…
சூப்பர் ஸ்டைல்…

—BGM—

பெண் : ஸ்டைலு ஸ்டைலுதான்…
இது சூப்பர் ஸ்டைலுதான்…
உன் ஸ்டைலுக் கேத்த மயிலு நானுதான்…

பெண் : ஸ்டைலு ஸ்டைலுதான்…
இது சூப்பர் ஸ்டைலுதான்…
உன் ஸ்டைலுக் கேத்த மயிலு நானுதான்…

பெண் : ஓ டச்சு டச்சு டச்சு டச்சு…
என்ன டச்சு மீ…
ஓ கிச்சு கிச்சு கிச்சு கிச்சு…
என்ன கிச்சுமீ…
ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி…

ஆண் : பிகரு பிகருதான் நீ சூப்பர் பிகருதான்…
இந்த பிகருக்கேத்த மைனர் நானுதான்…
பிகரு பிகருதான் நீ சூப்பர் பிகருதான்…
இந்த பிகருக்கேத்த மைனர் நானுதான்…

ஆண் : ஆ… டச்சு டச்சு டச்சு டச்சு…
என்ன டச்சு மீ…
ஓ… கிச்சு கிச்சு கிச்சு கிச்சு…
என்ன கிச்சுமீ…
ஏழு மணிக்கு மேல நீயும் இன்பலட்சுமி…

பெண் : ஸ்டைலு ஸ்டைலுதான்…
இது சூப்பர் ஸ்டைலுதான்…
உன் ஸ்டைலுக் கேத்த மயிலு நானுதான்…

—BGM—

ஆண் : காதலிச்சா கவிதை வரும்…
கண்டு கொண்டேன் பெண்ணாலே…

—BGM—

பெண் : கருப்பும் ஓர் அழகு என்று…
கண்டு கொண்டேன் உன்னாலே…

—BGM—

ஆண் : எங்கெங்கே ஷாக் அடிக்கும்…
அறிந்துக்கொண்டேன் பெண்ணாலே…

பெண் : எங்கெங்கே தேள் கடிக்கும்…
தெரிந்து கொண்டேன் உன்னாலே…

ஆண் : காஷ்மீர் ரோஜாவே…
கைக்கு வந்தாயே…
மோந்து பார்க்கும் முன்னே…
முள்ளெடுத்து குத்தாதே…

பெண் : அழகு ராஜாவே…
அவசரம் ஆகாதே…
மொட்டு மலரும் முன்னே…
முட்டி முட்டி சுத்தாதே…

ஆண் : அடி ராத்திரி வரவே…
என் ரகசிய செலவே…
ஒரு காத்தடிக்குது சோ்த்தணைக்கணும்…
காத்திரு நிலவே…

பெண் : ஸ்டைலு ஸ்டைலுதான்…
இது சூப்பர் ஸ்டைலுதான்…
உன் ஸ்டைலுக் கேத்த மயிலு நானுதான்…

ஆண் : பிகரு பிகருதான்…
நீ சூப்பர் பிகருதான்…
இந்த பிகருக்கேத்த மைனர் நானுதான்…

—BGM—

பெண் : பச்சரிசி பல்லழகா…
பால் சிரிப்பில் கொல்லாதே…

—BGM—

ஆண் : அழகு மணி தேரழகி…
அசைய விட்டே கொல்லாதே…

—BGM—

பெண் : நெத்தி தொடும் முடியழகா…
ஒத்தை முடி தாராயோ…

ஆண் : கட்டை மலர் குழலழகி…
ஒத்தை மலர் தாராயோ…

பெண் : அங்கே தீண்டாதே…
ஆசை தூண்டாதே…
சும்மா கிடந்த சங்க…
ஊதி விட்டு போகாதே…

ஆண் : ஊடல் கொள்ளாதே…
உள்ளம் தாங்காதே…
தலைவி காய்ச்சல் கொண்டால்…
தலையணையும் தூங்காதே…

பெண் : அட கெட்டது மனசு…
வந்து முட்டுது வயசு…
உன்ன பார்த்த பொழுது…
வேர்த்த பெண்களில் நானொரு தினுசு…

பெண் : ஸ்டைலு ஸ்டைலுதான்…
இது சூப்பர் ஸ்டைலுதான்…
உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானுதான்…

ஆண் : பிகரு பிகருதான்…
நீ சூப்பர் பிகருதான்…
இந்த பிகருக்கேத்த மைனர் நானுதான்…

பெண் : ஹேய்… டச்சு டச்சு டச்சு டச்சு…
என்ன டச்சு மீ…

ஆண் : அட கிச்சு கிச்சு கிச்சு கிச்சு…
என்ன கிச்சு மீ…

பெண் : ஏழு மணிக்கு மேல நானும் இன்பலட்சுமி…

பெண் : ஸ்டைலு ஸ்டைலுதான்…
ஆண் : ஹாஹா…

பெண் : இது சூப்பர் ஸ்டைலுதான்…
ஆண் : ஹாஹா…

பெண் : உன் ஸ்டைலுக்கேத்த மயிலு நானுதான்…
ஆண் : வா ரே வா…

ஆண் : பிகரு பிகருதான்…
பெண் : ஹ்ம்ம்…

ஆண் : நீ சூப்பர் பிகருதான்…
பெண் : ம்ம்ம் ஹ்ம்ம்…

ஆண் : இந்த பிகருக்கேத்த மைனர் நானுதான்…


Notes : Style Style Thaan Song Lyrics in Tamil. This Song from Baashha (1995). Song Lyrics penned by Vairamuthu. ஸ்டைலு ஸ்டைலுதான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading