காத்திருந்து காத்திருந்து

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. ஜெயச்சந்திரன்இளையராஜாவைதேகி காத்திருந்தாள்

Kaathirunthu Song Lyrics in Tamil

BGM

ஆண் : காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி…
நேத்துவரை சேர்த்து வச்ச ஆசைகள் வேகுதடி…
நீ இருந்து நான் அணைச்சா நிம்மதி ஆகுமடி…

ஆண் : காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி…

பெண் : ஆஆ… ஆரிரோ… ஆரிரோ…
ஆரிரோ… ஆரிரோ… ஆரிரோ…

பெண் : தங்க சலங்க கொண்டு தாய்மாமன் வருவாரு…
பொண்ணு மணியும் கொண்டு பொன்கூட தருவாரு…
பொழுதோட தூங்கு கண்ணே… ஆரி ஆரிரோ…
விடிஞ்சாக்கா முழிச்சுகலாம்… ஆரி ஆரிரோ…

BGM

ஆண் : ஆஆ… ஹா… ஆஆ…ஹா..ஆஆ…
முக்குளிச்சு நானெடுத்த முத்துச்சிப்பி நீதானே…
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள பத்திரமா வச்சேனே…
வச்சதிப்போ காணாம நானே தேடுறேன்…
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்…

ஆண் : நான் படிக்கும் மோகனமே…
நான் படைச்ச சீதனமே…
தேன் வடிச்ச பாத்திரமே…
தென்மதுர பூச்சரமே…
கண்டது என்னாச்சு…
கண்ணீரில் நின்னாச்சு…

ஆண் : காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி…

BGM

ஆண் : நீரு நிலம் நாலு பக்கம்…
நான் திரும்பி பாத்தாலும்…
அந்தப்பக்கம் இந்தப்பக்கம்…
அத்தனையும் நீயாகும்…

ஆண் : நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற…
நாடியிலே சூடேத்தி நீதான் வாட்டுற…

ஆண் : ஆலையிட்ட செங்கரும்பா ஆட்டுகிற எம் மனச…
யாரவிட்டு தூதுசொல்லி நான் அறிவேன் உம் மனச…
உள்ளமும் புண்ணாச்சு…
காரணம் பெண்ணாச்சு…

ஆண் : காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி…
நேத்துவரை சேர்த்துவச்ச ஆசைகள் வேகுதடி…
நீ இருந்து நான் அணைச்சா நிம்மதி ஆகுமடி…

ஆண் : காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி…
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி…

Notes : Kaathirunthu Song Lyrics in Tamil. This Song from Vaidehi Kathirunthal (1984). Song Lyrics penned by Vaali. காத்திருந்து காத்திருந்து பாடல் வரிகள்.

Scroll to Top