சொட்டாங்கல்லா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசீன் ரோல்டன்ஜி. வி. பிரகாஷ் குமார்ஜப்பான்

Sottangalla Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சொட்டாங்கல்லா சுழட்டுற பார்வ…
அம்மி வச்சு அரைக்குதம்மா…
தட்டான் போல மெத்தகுற மனசு…
குட்டிகரணம் அடிகுதம்மா…

ஆண் : சோழகாட்டு யானை போல…
நெஞ்சுக்குள்ள பாயுறியே…
சீனி மேல ஈயா நீயும்…
எச்சி வைக்க மேயுரியே… ஏ…

ஆண் : பொக்க நீயும் நெல்லா தூத்துறியே… ஏஏ…
கள்ளி பால தேனா மாத்துறியே… ஏஏ…

—BGM—

ஆண் : வெக்க வந்தா நீதான் ஈரம்…
வெயிலுக்கு நீராகாரம்…
கும்மிருட்டில் கோடி கோயில் தீபம் நீதானே…

ஆண் : அள்ளி திங்க நீதான் சாதம்…
அங்காயம்மன் சாமி பாதம்…
கப்பி கல்லு தாகம் தீக்கும் மேகம் நீதானே…

ஆண் : சுட்ட மண்ணு உன் கை அள்ள…
சொக்க தங்கம் ஆனேனே…
கிட்டிபுள்ளா நீயும் தட்ட…
ஏரோபிளேனா போனேனே…

ஆண் : அள்ளி உன்ன நா எடுக்க அத்தனையும் உன் வாசம்…
கக்கத்துல ஆகாசம்…

—BGM—

ஆண் : ஒட்டு தின்ன ஓரம் ஆடு…
ஒத்தாசைக்கு ஏது ஈடு…
தொட்டு என்ன நீயும் தூக்க…
காலம் மாறாதோ…

ஆண் : சொந்தம் உன்ன சேர்ந்த வீடு…
சுள்ளி வச்ச மைனா கூடு…
அள்ளி அள்ளி ஊட்டும்…
தாய காதல் ஏந்தாத்தோ…

ஆண் : மொச்சை கொட்ட பல்லு பாத்தா…
வெள்ளி வைரம் வேணாமே…
எச்சி வச்சு நீயும் தந்தா…
வெல்லும் அகும் எல்லாமே…

ஆண் : சிப்பி முத்து நீ சிரிக்க நட்சத்திரம் கைவீசும்
முத்ததுல பால் வாசம்…

ஆண் : சொட்டாங்கல்லா சுழட்டுற பார்வ…
அம்மி வெச்சு அரைக்குதம்மா…
தட்டான் போல மெத்தகுற மனசு…
குட்டிகரணம் அடிகுதம்மா…

ஆண் : சோழகாட்டு யானை போல…
நெஞ்சுக்குள்ள பாயுறியே…
சீனி மேல ஈயா நீயும்…
எச்சி வைக்க மேயுரியே… ஏ…

ஆண் : பொக்க நீயும் நெல்லா தூத்துறியே… ஏஏ…
கள்ளி பால தேனா மாத்துறியே… ஏஏ…


Notes : Sottangalla Song Lyrics in Tamil. This Song from Japan (2023). Song Lyrics penned by Yugabharathi. சொட்டாங்கல்லா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading