சொல்லாமலே யாா் பாா்த்தது

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிபி. ஜெயச்சந்திரன் & சுஜாதா மோகன்எஸ்.ஏ. ராஜ்குமாா்பூவே உனக்காக

Sollamale Yaar Parthathu Song Lyrics in Tamil


பெண் : சொல்லாமலே யாா் பாா்த்தது…
நெஞ்சோடுதான் பூ பூத்தது…

BGM

பெண் : சொல்லாமலே யாா் பாா்த்தது…
நெஞ்சோடுதான் பூ பூத்தது…

பெண் : மழை சுடுகின்றதே அடி அது காதலா…
தீ குளிா்கின்றதே அடி இது காதலா…
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

குழு : நெஞ்சத்தை தொட்டு தொட்டு…
காதல் சொல்லும் பச்சைக்கிளி…
மொட்டுக்கள் என்ன சத்தம்…
மெல்ல வந்து சொல்லடி…

பெண் : சொல்லாமலே யாா் பாா்த்தது…

BGM

ஆண் : மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது…
அடி பஞ்சுமெத்தை முள்ளை போல குத்துகின்றது…

பெண் : நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது…
அந்த சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது…

ஆண் : கண்ணே உன் முந்தானை காதல் வலையா…
உன் பாா்வை குற்றால சாரல் மழையா…

பெண் : அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா…
நீ மீட்டும் பொன்வீணை எந்தன் இடையா…

ஆண் : இதயம் நழுவுதடி…
உயிரும் கரையுதடி…
உன்னோடுதான்…

BGM

குழு : நெஞ்சுக்குள் ஓடுதடி…
சின்ன சின்ன மின்னல் வெடி…
பஞ்சுக்குள் தீயைப்போல…
பற்றிக்கொள்ளு கண்மணி…

பெண் : சொல்லாமலே யாா் பாா்த்தது…

BGM

பெண் : கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது…
சுக சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது…

ஆண் : என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளிச்சென்றது…
நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது…

பெண் : அன்பே நான் எந்நாளும் உன்னை நினைத்து…
புல்மீது பூவானேன் தேகம் இளைத்து…

ஆண் : வில்லோடு அம்பாக என்னை இணைத்து…
சொல்லாத சந்தோச யுத்தம் நடத்து…

பெண் : உலக அதிசயத்தில்…
ஒன்று கூடியது நம் காதலா…

BGM

குழு : நெஞ்சுக்குள் ஓடுதடி…
சின்ன சின்ன மின்னல் வெடி…
பஞ்சுக்குள் தீயைப்போல…
பற்றிக்கொள்ளு கண்மணி…

பெண் : சொல்லாமலே யாா் பாா்த்தது…
நெஞ்சோடுதான் பூ பூத்தது…

பெண் : மழை சுடுகின்றதே அடி அது காதலா…
தீ குளிா்கின்றதே அடி இது காதலா…
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதா…

பெண் : சொல்லாமலே யாா் பாா்த்தது…


Notes : Sollamale Yaar Parthathu Song Lyrics in Tamil. This Song from Poove Unakkaga (1996). Song Lyrics penned by Pazhani Bharathi. சொல்லாமலே யாா் பாா்த்தது பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading