ஊரத் தெரிஞ்சிகிட்டேன்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துகே.ஜே. யேசுதாஸ்இளையராஜாபடிக்காதவன்

Oora therinjikitten Song Lyrics in Tamil

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…

—BGM—

ஆண் : பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்…
பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி…

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…

—BGM—

ஆண் : ஏது பந்த பாசம்…
எல்லாம் வெளி வேஷம்…
காசு பணம் வந்தா…
நேசம் சில மாசம்…

ஆண் : சிந்தினேன் ரத்தம் சிந்தினேன்…
அது எல்லாம் வீண்தானோ…
வேப்பிலை கரிவேப்பிலை…
அது யாரோ நான்தானோ…

ஆண் : என் வீட்டுக் கன்னுக்குட்டி என்னோட மல்லுக் கட்டி…
என் மார்பில் முட்டுதடி…
கண்மணி என் கண்மணி…
தீப்பட்ட காயத்தில தேள் வந்து கொட்டுதடி…
கண்மணி கண்மணி…

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…

—BGM—

ஆண் : நேற்று இவன் ஏணி…
இன்று இவன் ஞானி…
ஆள கரை சேத்து…
ஆடும் இந்தத் தோனி…

ஆண் : சொந்தமே ஒரு வானவில்…
அந்த வர்ணம் கொஞ்ச நேரம்…
பந்தமே முள்ளானதால்…
இந்த நெஞ்சில் ஒரு பாரம்…

ஆண் : பணங்காச கண்டு புட்டா…
புலி கூட புல்ல தின்னும் கலிகாலம் ஆச்சுதடி…
கண்மணி என் கண்மணி…
அடங்காத காள ஒன்னு அடிமாடா போனதடி…
கண்மணி கண்மணி…

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…

ஆண் : பச்சக் குழந்தையின்னு பாலூட்டி வளர்த்தேன்…
பால குடிச்சிப்புட்டு பாம்பாக கொத்துதடி…

ஆண் : ஊரத் தெரிஞ்சிகிட்டேன் உலகம் புரிஞ்சிகிட்டேன்…
கண்மணி என் கண்மணி…
ஞானம் பொறந்திருச்சு நாளும் புரிஞ்சிடுச்சு…
கண்மணி என் கண்மணி…

Notes : Oora therinjikitten Song Lyrics in Tamil. This Song from Padikathavan (1985). Song Lyrics penned by Vairamuthu. ஊரத் தெரிஞ்சிகிட்டேன் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading