என்ன நெனச்ச நீ

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
ஆர்.வி.உதயகுமார்அனுராதா ஸ்ரீராம் & பி. உன்னிகிருஷ்ணன்தேவாசொக்க தங்கம்

Enna Nenacha Nee Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச…
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது…

—BGM—

ஆண் : என்ன நெனச்ச நீ என்ன நெனச்ச…
என் நெஞ்சுக்குள்ள உன்ன வச்சு தச்சபோது…

பெண் : சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்…
நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன்…
சொக்கி தவிச்சேன் சொக்கி தவிச்சேன்…
நான் சொக்க தங்கம் கிட்டியதா துள்ளி குதிச்சேன்…

பெண் : குற்றால சாரல் அது…
கண்ணோரம் ஊறி வர…
உன்ன நெனச்சேன் நான் உன்ன நெனச்சேன்…
எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்…

—BGM—

ஆண் : நான் தர சிற்பம்…
உன்னோட வெப்பம்…
நான் தொட்டு பாக்குறப்போ என்ன நெனச்ச…

பெண் : தீக்குச்சி வந்து…
தீக்குச்சி கிட்ட…
சௌக்கியம் கேக்குதுன்னு நானும் நெனச்சேன்…

ஆண் : உன் கன்னக்குழி முத்தம் வச்சேன்…
என்ன நெனச்ச…

பெண் : என் நெஞ்சுக்குழி மீதும் ஒன்னு…
கேக்க நெனச்சேன்…

ஆண் : என் பேராசை நூறாசை கேட்கையில்…
அடி தேன் மல்லி நீ என்ன நெனச்சடி…

பெண் : ஆறேழு கட்டிலுக்கும்…
அஞ்சாறு தொட்டிலுக்கும்…
சொல்ல நெனச்சேன்…
நான் சொல்ல நெனச்சேன்…
உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்…

பெண் : அள்ள நெனச்சேன்…
நான் அள்ள நெனச்சேன்…
உன்ன ஒட்டுமொத்த குத்தகையா அள்ள நெனச்சேன்…

—BGM—

ஆண் : மெத்தைக்கு மேல…
உன்னோட சேல…
என் கையில் சிக்கும் வேளை என்ன நெனச்ச…

பெண் : எப்போதும் போல…
உன்னோட வேலை…
ஆரம்பம் ஆச்சுதுன்னு நானும் நெனச்சேன்…

ஆண் : நீ உள்காயத்தை பாக்குறப்போ…
என்ன நெனச்ச…

பெண் : நீ நகம் வெட்ட வேணுமுன்னு…
சொல்ல நெனச்சேன்…

ஆண் : நாம் ஒன்னோடு ஒன்னாகும் நேரத்தில்…
உன் பூந்தேகம் தாங்குமான்னு நெனச்சயா…

பெண் : கல்யாண சொர்கத்துல…
கச்சேரி நேரமுன்னு…
கட்டி புடிச்சேன்…
நான் கட்டி புடிச்சேன்…
என் வெட்கம்விட்டு மூச்சு முட்ட கட்டி புடிச்சேன்…

ஆண் : சொக்கி தவிச்சேன்…
சொக்கி தவிச்சேன்…
நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன்…

ஆண் : சொக்கி தவிச்சேன்…
சொக்கி தவிச்சேன்…
நான் சொர்க்கத்தையே எட்டியதா துள்ளி குதிச்சேன்…

பெண் : குற்றால சாரல் அது…
கண்ணோரம் ஊறி வர…
உன்ன நெனச்சேன்…
நான் உன்ன நெனச்சேன்…
எந்த பூர்வ ஜென்ம புண்ணியமோ உன்ன அடைஞ்சேன்…

—BGM—


Notes : Enna Nenacha Nee Song Lyrics in Tamil. This Song from Chokka Thangam (2003). Song Lyrics penned by R. V. Udayakumar. என்ன நெனச்ச நீ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading