என்னை தாலாட்டும்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசுஜாதா மோகன் & உன்னி மேனன்சிற்பிஉன்னை நினைத்து

Ennai Thalattum Song Lyrics in Tamil

—BGM—

ஆண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…

ஆண் : உன்னை மழை என்பதா…
இல்லை தீ என்பதா…
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா…
உன்னை நான் என்பதா…

பெண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…

—BGM—

ஆண் : நதியாக நீயும்…
இருந்தாலே நானும்…
நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன்…

பெண் : இரவாக நீயும்…
நிலவாக நானும்…
நீயிருக்கும் நேரம் வரை உயிா் வாழ்கிறேன்…

ஆண் : முதல் நாள் என் மனதில்…
விதையாய் நீ இருந்தாய்…
மறுநாள் பாா்க்கையிலே…
வனமாய் மாறிவிட்டாய்…
நாடி துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய்…
நெஞ்சில் நீ வாழ்கிறாய்…

பெண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…

—BGM—

பெண் : பூலோகம் ஓா் நாள்…
காற்றின்றி போனால்…
எந்தன் உயிா் உந்தன் மூச்சு காற்றாகுமே…

ஆண் : ஆகாயம் ஓா் நாள்…
விடியாமல் போனால்…
எந்தன் ஜீவன் உந்தன் கையில் விளக்காகுமே…

பெண் : அன்பே நான் இருந்தேன்…
வெள்ளை காகிதமாய்…
என்னில் நீ வந்தாய்…
பேசும் ஓவியமாய்…

பெண் : தீபம் நீயென்றால்…
அதில் நானே திாி ஆகிறேன்…
தினம் திாியாகிறேன்…

ஆண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…

ஆண் : உன்னை மழை என்பதா…
இல்லை தீ என்பதா…
அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா…
உன்னை நான் என்பதா…

பெண் : என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…
உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…

Notes : Ennai Thalattum Song Lyrics in Tamil. This Song from Unnai Ninaithu (2002). Song Lyrics penned by P. Vijay. என்னை தாலாட்டும் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading