பொம்பளைங்க காதலத்தான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்மாணிக்க விநாயகம் & பி. உன்னிகிருஷ்ணன்வித்யாசாகர்உன்னை நினைத்து

Pombalainga Kadhal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே…
நம்பிவிடாதே…

—BGM—

ஆண் : நம்பியதால் நொந்துமனம் வெம்பிவிடாதே…
வெம்பிவிடாதே…

—BGM—

ஆண் : அத்தான்னு சொல்லியிருப்பா ஆசையக்காட்டி…
அண்ணான்னு சொல்லி நடப்பா ஆளையும் மாத்தி…
ஆம்பளையெல்லாம் அஹிம்சா பாா்டி…
பொம்பளையெல்லாம் தீவிரவாதி…

ஆண் : பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே…
நம்பிவிடாதே…

—BGM—

ஆண் : நம்பியதால் நொந்துமனம் வெம்பிவிடாதே…
வெம்பிவிடாதே…

—BGM—

ஆண் : பெண்ணாலே பைத்தியமா போனவன் உண்டு…
இங்கு ஆண்களாலே பைத்தியமா ஆனவள் உண்டா…
பெண்ணாலே காவிகட்டி நடந்தவன் உண்டு…
இங்கு ஆண்களாலே காவிகட்டி நடந்தவள் உண்டா…

ஆண் : பெண்ணுக்கு தாஜ்மகால் கட்டி வச்சான்டா…
எவளாச்சும் ஒருசெங்கல் நட்டுவச்சாளா…
நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே…
நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே…

ஆண் : பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே…
நம்பிவிடாதே…

—BGM—

ஆண் : நம்பியதால் நொந்துமனம் வெம்பிவிடாதே…
வெம்பிவிடாதே…

—BGM—

ஆண் : பெண்ணெல்லாம் பரீட்சையிலே முதலிடம் தாங்க…
நம்ம பசங்களத்தான் எங்கே அவங்க படிக்கவிட்டாங்க…
பெண்ணெல்லாம் தங்க மெடல் ஜெயிச்சு வந்தாங்க…
நம்ம பையன் முகத்தில் தாடியத்தான் முளைக்கவச்சாங்க…

ஆண் : பெண்ணெல்லாம் உலக அழகி ஆகிவந்தாங்க…
ஆண்ணெல்லாம் காதலிச்சே தலை நரைச்சாங்க…
நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே…
நம்பிவிடாதே பொண்ண நம்பிவிடாதே…

ஆண் : பொம்பளைங்க காதலத்தான் நம்பிவிடாதே…
நம்பிவிடாதே…

—BGM—

ஆண் : பொம்பளைங்க பொம்பளைங்க மோசம் இல்லைங்க…
மோசம் இல்லைங்க…
பொம்பளைங்க இல்லையினா நீங்க இல்லைங்க…
நானும் இல்லைங்க…

ஆண் : உன்னை இங்கே பெத்தவளும் பொம்பளைதானே…
உன்னோட பொறந்தவளும் பொம்பளைதானே…

ஆண் : தப்பு செய்யாதே…
நீ பொண்ண திட்டாதே…
தப்பு செய்யாதே…
நீ பொண்ண திட்டாதே…


Notes : Pombalainga Kadhal Song Lyrics in Tamil. This Song from Unnai Ninaithu (2002). Song Lyrics penned by Pa. Vijay. பொம்பளைங்க காதலத்தான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading