என் ஜன்னல் நிலவுக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா.விஜய்ஹரிஹரன் & சாதனா சர்கம்தேவாசொக்கத்தங்கம்

En Jannal Nilavukku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு…
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு…
என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு…
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு…

ஆண் : கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி…
கொஞ்சுகின்ற அழகே…
குங்குமத்தில் புரட்டி எடுத்த…
குண்டுமல்லி சரமே…

ஆண் : மந்த மாருதம்…
உந்தன் மேனியில்…
பூத்திருக்க…

பெண் : உன் ஜன்னல் நிலவிங்கு வந்தாச்சு…
உன் கண்ணில் பட்டுவிட்டு நின்னாச்சு…

பெண் : கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி…
கொஞ்சுகின்ற அழகா…
குங்குமத்தில் புரட்டி எடுத்த…
குண்டுமல்லி சரமா…

பெண் : மந்த மாருதம்…
எந்தன் மேனியில்…
பூத்திருக்கு…

ஆண் : என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு…

பெண் : உன் கண்ணில் பட்டுவிட்டு நின்னாச்சு…

—BGM—

ஆண் : எத்தனை மச்சம் உன்னிடம் உண்டு…
காத்துக்கும் எனக்கும்தான்…
அது தெரியும்…

பெண் : எத்தனை வேகம் உன்னிடம் உண்டு…
இருட்டுக்கும் எனக்கும்தான்…
அது புரியும்…

ஆண் : கச்சை கட்டி பூ பூத்த…
பூந்தோட்டமே…
உச்சி வரை நான் மூழ்க…
தேன் பாய்ச்சுமே…

பெண் : பத்து விரல் போதாது…
உன் மோகமே…
லட்சம் விரல் நீ…
கொண்டு வா வானமே…

ஆண் : என் முத்துமணி சுடர்…
முல்லை மலர்திடல் நாணுவதேன்…

ஆண் : என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு…
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு…

பெண் : உன் ஜன்னல் நிலவிங்கு வந்தாச்சு…
உன் கண்ணில் பட்டு விட்டு நின்னாச்சு…

—BGM—

ஆண் : முக்கனி அதில் முக்கியம் கொண்ட…
முதல் கனி முதல் கனி பார்த்துவிட்டேன்…

பெண் : பத்தினி பெண்ணின் பத்தியம் தேட…
ஓரிடம் ஓரிடம் வேர்த்துவிட்டேன்…

ஆண் : பூர்வ ஜென்ம ஓர் பந்தம் நீ வந்தது…
என்றும் இனி நீங்காது நாம் சேர்ந்தது…

பெண் : தன்னந்தனி தீவாக…
நான் வாழ்ந்தது…
என்னை சுற்றி உன் கைகள்…
பூ போட்டது…

ஆண் : உன் வெள்ளை மனசிலும்…
வெட்க சிரிப்பிலும் வாழ்ந்திருப்பேன்…

ஆண் : என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு…
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு…

பெண் : கண்கள் ரெண்டை உருட்டி மிரட்டி…
கொஞ்சுகின்ற அழகா…
குங்குமத்தில் புரட்டி எடுத்த…
குண்டுமல்லி சரமா…

ஆண் : மந்த மாருதம்…
உந்தன் மேனியில்…
பூத்திருக்க…

ஆண் : என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு…
என் கண்ணில் பட்டு ரொம்ப நாளாச்சு…

பெண் : உன் ஜன்னல் நிலவிங்கு வந்தாச்சு…
உன் கண்ணில் பட்டுவிட்டு நின்னாச்சு…


Notes : En Jannal Nilavukku Song Lyrics in Tamil. This Song from Chokka Thangam (2003). Song Lyrics penned by Pa Vijay. என் ஜன்னல் நிலவுக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading