இந்தக் காதலில்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஆண்ட்ரியா ஜெரெமையா & அஸ்லம்யுவன் ஷங்கர் ராஜாபொம்மை

Indha Kadhalil Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : இந்தக் காதலில் மறுபடி வீழும் நொடி…
விரல் கோர்க்கவும் உன் ஒரு கரம் போதுமடி…
உன் இமைத்திட விழிகளைப் பார்த்தபடி…
பேரமைதியில் இதயமும் தூங்குதடி…

—BGM—

பெண் : உடை உடல் உயிர்…
மூன்றையும் தாண்டி…
உன்னை என்னை…
இங்கு சேர்த்தது காதல்…
தனி உலகில் நாம் இனி வாழ…
தொடரும் காதல்…

ஆண் : ஹோ ஹோ… நொடி கனம் யுகம்…
மூன்றையும் தாண்டி…
உன்னில் என்னில்…
இங்கே நீந்திடும் காதல்…
புவி பெருவெளி யாவும் தாண்டி…
படரும் காதல்…

பெண் : அன்றே நீ என்னை பிரிந்தது…
யாரின் சதி…
இன்று உன்னுடன் இணைத்தது…
காதல் நதி…

ஆண் : இனிமேல் இந்த மனிதர்கள்…
தேவை இல்லை…
இந்த காதலை தடுத்திட…
யாரும் இல்லை…

பெண் : நீ வெறிந்திடும் நொடி வினை புன்னகையே…

ஆண் : நீதானே அதை வரைந்திடும் தூரிகையே…

—BGM—

ஆண் : ஒரே முகம் ஒரே குரல்…
முப்பொழுதும் உந்தன் வாசனை…
கண் மூடினால் ஒரே கனா நீதானாடி…

பெண் : விழிகளில் மை தீட்டி…
திறந்தாய் என்னை…
மறுபடி மை கொண்டு…
அடைந்தேனே உன்னை…

ஆண் : மருந்தாய் கரைந்தாய்…
அருந்தாய் இருந்தாய் பிறந்தாயே…

—BGM—


Notes : Indha Kadhalil Song Lyrics in Tamil. This Song from Bommai (2023). Song Lyrics penned by Madhan Karky. இந்தக் காதலில் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading