முதல் முத்தம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கியுவன் ஷங்கர் ராஜா & ஸ்வேதா மோகன்யுவன் ஷங்கர் ராஜாபொம்மை

Mudhal Muththam Song Lyrics in Tamil


—BGM—

பெண் : யாருமில்லாத மாமலை மீது…
என்னோடு நீ…
ஆடையில்லாத முழு நிலா…
ஒளியில் நனைகின்ற நான்…

பெண் : மேனி மேல் மோதும் காற்றினை…
உடைத்து தடுக்கின்ற நீ…
பூமியின் மொத்த காதலை…
குடிக்க துடிக்கின்ற நான்…

ஆண் : உயிர் முழுதும் திரட்டி…
இதழ் மீது தீ மூட்டியே…
அணைத்திடவே அழைத்தேன்…
உன் இதழில் தேன் கொட்டியே…

ஆண் : முத்தம் முதல் முத்தம்…
அது இதயம் திறக்கின்ற…
வழியென அறிந்திடு…

ஆண் : முத்தம் முதல் முத்தம்…
அது உயிரை பரிமாறும்…
குழலென புரிந்திடு…

பெண் : முத்தம் முதல் முத்தம்…
அது எல்லை இல்லாத…
பரவசம் என உணர்ந்திடு

பெண் : முத்தம் முதல் முத்தம்…
தரும் நாள் திருநாளடா…

ஆண் : ஏஏ… யாருமில்லாத மாமலை மீது…
என்னோடு நீ…
பூமியின் மொத்த காதலை…
குடிக்க துடிக்கின்ற நான்…

—BGM—

ஆண் : ஓர் வானம் ஓர் பூமி…
ஓர் வாழ்க்கைதான் நம்முன்னே…
வாய் சேர்க்க நாள் பார்த்தால்…
நாள் போதாது பெண்ணே…

பெண் : நீ கேட்டால் ஓர் நாளில்…
கொட்டும் முத்தங்கள் ஒரு கோடி…
முதல் முத்தம் அது மட்டும்…
நான் கேட்கும்படி…

ஆண் : நாற்பத்து மூன்று வகை முத்தம்…
கலைகளில் மொத்தம்…
நீ அதை கேட்கிறாய்…

ஆண் : அளித்திடும் வன்மை வகை முத்தம்…
வெண்மை வகை முத்தம்…
என்ன எதிர் பார்க்கிறாய்…

பெண் : இரெல்லாம் நொடி நாளெனாவிலே…
மனப்பாடம் செய்யலாம்…
இதழ் கோர்க்கும் நீரின் நூலில்…
ஆடை நெய்யலாம்…

பெண் : முத்தம் முதல் முத்தம்…
அது இதயம் திறக்கின்ற…
வழியென அறிந்திடு…

பெண் : முத்தம் முதல் முத்தம்…
அது உயிரை பரிமாறும்…
குழலென புரிந்திடு…

ஆண் : முத்தம் முதல் முத்தம்…
அது எல்லை இல்லாத…
பரவசம் என உணர்ந்திடு…

ஆண் : முத்தம் முதல் முத்தம்…
தரும் நாள் திருநாளம்மா…

—BGM—


Notes : Mudhal Muththam Song Lyrics in Tamil. This Song from Bommai (2023). Song Lyrics penned by Madhan Karky. முதல் முத்தம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading