சொக்கி போறான்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்அல் ருஃபியன் & மாளவிகா சுந்தர்ஜி.வி.பிரகாஷ் குமார்முப்பரிமாணம்

Sokki Poraandi Song Lyrics in Tamil


—BGM—

குழு : சொக்கி போறான்டி வெட்கி போறான்டி…
உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்…
செக்கச்செவ்வானம் வெட்க படும்போது…
உன் கன்னத்தை கடன் வாங்க ஓடி வரும்…

பெண் : கொத்தோடு குலையோடு பூப்பூக்கும் வாசம் போல்…
காத்தோடு உன் சுவாசம் தேடிப்போறேன்…
குலசாமி திரு நீரு வச்சாலும் சிலிர்க்காம…
நீ தொட்டா அங்கங்க சிலுத்து போறேன்…

ஆண் : உன் கண் ஜாடை அசைவுக்கும்…
கால் கொலுசு நெலிவுக்கும்…
அடி போடி பெண்ணே கொடை சாஞ்சு போறேன்…

ஆண் : நீ பார்க்காத நேரத்தில்…
நான் உன்ன பாா்த்துதான்…
நீ பார்க்கும் போது அலைபாஞ்சுப்போறேன்…

பெண் : ஹே… தீக்குச்சி தலமேல பாரத்தை போல…
என் நெஞ்சோடு ஒரு பாரம் தந்தாயடா…
என் தூக்கத்த பல நாளா நீ வாங்கி போற…
நா படுத்தாலும் கனவோடு வந்தாயடா…

குழு : சொக்கி போறான்டி வெட்கி போறான்டி…
உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்…
செக்கச்செவ்வானம் வெட்க படும்போது…
உன் கன்னத்தை கடன் வாங்க ஓடி வரும்…

—BGM—

ஆண் : ஹே… பஞ்சாரத்து வெடக்கோழிப்போல…
என் நெஞ்சோரம் உன் வாசம் துள்ளுதடி…
ஹே… பஞ்சாங்கத்தில் நாள் பாக்கச் சொல்லி…
உன் கண்ணோரம் கதைப்பேசி சொல்லுதடி…

பெண் : என் காதோரத்தில் ஒரு பக்ஷி வந்து…
தினமும் உன் பேர சொல்லித்தான் கூவுதடா…
என் தொடும் துாரத்தில் நீ வரும்போதெல்லாம்…
நான் விடும் மூச்சு அனலாக கொல்லுதடா…

ஆண் : பஞ்சால மேலதான் தீ மூட்டிப்போறியே…
ஹை ஹையோ அங்கங்க எரியுதடி…
அஞ்சாறு முத்தத்த நீ தந்து போனினா…
ஆஹா ஆஹா என் ஏக்கம் அணையுமடி…

குழு : சொக்கி போறான்டி வெட்கி போறான்டி…
உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்…
செக்கச்செவ்வானம் வெட்க படும்போது…
உன் கன்னத்தை கடன் வாங்க ஓடி வரும்…

—BGM—

பெண் : ஹே… உன் கூடத்தான் தினம் தொியாம தான்…
அட நான் வாழ வரம் ஒன்று வேணுமடா…
ஹே… உன் மார்பில்தான் இரு கண்மூடித்தான்…
அட நான் தூங்க இடம் ஒன்னு வேணுமடா…

ஆண் : ஹே… ஆகாசத்தில் ஒரு மெத்தை போட்டு…
அங்க உன் கூட விளையாட தோணுதடி…
ஹே… ஆனந்தத்தில் என் காலு ரெண்டும்…
அடி என் பேச்சை கேட்காம துள்ளுதடி…

பெண் : கடிகாரம் இல்லாம நொடி நேரம் ஓடாம…
இங்கேயே இப்போதே நின்றால் என்ன…
மடி மீது நான் சாய தாயாக நீ மாறி…
தாலாட்டு பாட்டு ஒன்று சொன்னால் என்ன…

குழு : சொக்கி போறான்டி வெட்கி போறான்டி…
உன் கண்ணுக்குள் விழுந்தானே நூறுதரம்…
செக்கச்செவ்வானம் வெட்க படும்போது…
உன் கன்னத்தை கடன் வாங்க ஓடி வரும்…

—BGM—


Notes : Sokki Poraandi Song Lyrics in Tamil. This Song from Mupparimanam (2017). Song Lyrics penned by Na. Muthukumar. சொக்கி போறான்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading