மெல்ல சிரித்தால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதியுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாஆதலால் காதல் செய்வீர்

Mella Sirithal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மெல்ல சிரித்தால் காதல்தான்…
மின்னல் அடித்தால் காதல்தான்…
கண் இமைத்தால் காதல்தான்…
கை அசைத்தால் காதல்தான்…

ஆண் : துள்ளி குதித்தால் காதல்தான்…
தொட்டு அனைத்தால் காதல்தான்…
முத்தம் கொடுத்தால் காதல்தான்…
மூச்சைப் பறித்தால் காதல்தான்…

ஆண் : ஆதலால் ஆதலால்…
காதல் செய்வீர் காதல் செய்வீர்…
ஆதலால் ஆதலால்…
காதல் செய்வீர் காதல் செய்வீர்…

—BGM—

ஆண் : காதலித்துப்பார் காலம் வென்றிடும்…
தெருவிளக்கெங்கும் நிலா தென்படும்…
காதலித்துப்பார் பாடப்புத்தகம் கவிதைத்தொகுப்பாகும்…

ஆண் : காதலித்துப்பார் வேர்வை மின்னிடும்…
இருமிய சத்தம் இசை ஆகிடும்…
காதலித்துப்பார் பூமி மொத்தமும்…
புதிதாய் உருமாறும்…

ஆண் : காதலித்துப்பார் உண்மையில்…
கைது செய்யலாம் காற்றையும்…
காதலித்துப்பார் நண்பனே…
வாழத்தோன்றுமே நாளையும்…
தேவதைகளின் ஆசிதானே…
காதலென்று கூறுகின்றேன்…

ஆண் : ஆதலால் ஆதலால்…
காதல் செய்வீர் காதல் செய்வீர்…
ஆதலால் ஆதலால்…
காதல் செய்வீர் காதல் செய்வீர்…

—BGM—

ஆண் : காதலிப்பதால் வானவில்லினை…
நீ குடைகளுக்குள்ளே நாளும் வைக்கலாம்…
காதலிப்பதால் மூளை எங்கிலும்…
குடையும் சந்தோஷம்…

ஆண் : காதலிப்பதால் வீட்டுத் திண்ணையும்…
அரசவைக் கட்டில் போல மாறிடும்…
காதலிப்பதால் தேகச் செல்களில்…
பரவும் மின்சாரம்…

ஆண் : காதலிப்பதால் கங்கையும்…
வந்து சேருமே கோப்பையில்…
காதலிப்பதால் புன்னகை…
நீளமாகுமே வாழ்க்கையில்…
சாலைக்கற்களும் சாமியாக மாறலாமே…
காதல் செய்தால்…

ஆண் : ஆதலால் ஆதலால்…
காதல் செய்வீர் காதல் செய்வீர்…
ஆதலால் ஆதலால்…
காதல் செய்வீர் காதல் செய்வீர்…

—BGM—


Notes : Mella Sirithal Song Lyrics in Tamil. This Song from Aadhalal Kadhal Seiveer (2013). Song Lyrics penned by Yugabharathi. மெல்ல சிரித்தால் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading