சிறகடிக்கும் நிலவு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கார்த்திக் & ரீட்டாமணி சர்மாசுறா

Siragadikkum Nilavu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சிறகடிக்கும் நிலவு…
கரம் பிடித்தது என்னை…

பெண் : பார்த்தவுடன் உன்னை…
தந்துவிட்டேன் என்னை…

ஆண் : இருவருக்கும் மட்டும்…
வேண்டும் ஒரு பூமி…

பெண் : காவலுக்கு வேண்டும்…
காதல் எனும் சாமி…

ஆண் : சிறகடிக்கும் நிலவு…
கரம் பிடித்தது என்னை…

பெண் : பார்த்தவுடன் உன்னை…
தந்துவிட்டேன் என்னை…

ஆண் : இருவருக்கும் மட்டும்…
வேண்டும் ஒரு பூமி…

பெண் : காவலுக்கு வேண்டும்…
காதல் எனும் சாமி…

—BGM—

ஆண் : என் வீட்டில் எல்லா புறமும்…
உன் வாசம் ஏன் தந்தாய்…

—BGM—

ஆண் : என் வீட்டில் எல்லா புறமும்…
உன் வாசம் ஏன் தந்தாய்…
சில நேரம் யாரைக் கேட்டு…
எனக்குள்ளே நீ சென்றாய்…

பெண் : என் கால்கள் தனியாக…
உன் பின்னே செல்கிறதே…
என் நெஞ்சம் துணியாக…
உன் வழியில் கிடக்கிறதே…

ஆண் : சூரியனை தின்ற…
மல்லிகையும் நீதான்…

பெண் : வெண்ணிலவை தோளில்…
சுமந்தவனும் நீதான்…

ஆண் : சிறகடிக்கும் நிலவு…
கரம் பிடித்தது என்னை…

பெண் : பார்த்தவுடன் உன்னை…
தந்துவிட்டேன் என்னை…

—BGM—

ஆண் : ஆகாயம் தாண்டிட நெஞ்சம்…
இப்போது நினைக்கிறதே…

—BGM—

ஆண் : ஆகாயம் தாண்டிட நெஞ்சம்…
இப்போது நினைக்கிறதே…
அழகான தவறுகள் கூட…
நீ செய்ய பிடிக்கிறதே…

பெண் : அறியாத குழந்தை போல…
என் மனது குதிக்கிறதே…
ஏதேதோ வேண்டும் என்று…
அடம் பிடித்து கேட்கிறதே…

ஆண் : பட்டியலை எழுது…
தருகிறேன் நானே…

பெண் : ஒட்டுமொத்த தேவை…
நீ ஒருவன்தானே…

ஆண் : சிறகடிக்கும் நிலவு…
கரம் பிடித்தது என்னை…

பெண் : பார்த்தவுடன் உன்னை…
தந்துவிட்டேன் என்னை…

ஆண் : புன்னகைகள் சிந்தும்…
பொன்நகையும் நீதான்…

பெண் : பெண்ணுலகம் ரசிக்கும்…
பேரழகன் நீதான்…


Notes : Siragadikkum Nilavu Song Lyrics in Tamil. This Song from Suraa (2010). Song Lyrics penned by Snehan. சிறகடிக்கும் நிலவு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading