மன்னவனே மன்னவனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
காளிதாசன்கே.எஸ். சித்ரா & எஸ். பி. பாலசுப்ரமணியம்தேவாகோட்டை வாசல்

Mannavane Mannavane Song Lyrics in Tamil


BGM

பெண் : மன்னவனே மன்னவனே…
மாலையிட்ட தென்னவனே…
உன்னப்போல யாரும் இல்ல…
தலைவா தலைவா…

ஆண் : சின்னக்கிளி அன்னக்கிளி…
சேல கட்டும் வண்ண கிளி…
என்ன வேணும் கேளு…
நான் தரவா தரவா…

பெண் : உன்ன நெனச்சித்தான் நான் நிதமும்தான்…
என் தலவாரி பூச்சூடினேன்…

ஆண் : ஒரு நாளும் பூவும் பொட்டும்…
வாடாது மானே…

பெண் : மன்னவனே மன்னவனே…
மாலையிட்ட தென்னவனே…
உன்னப்போல யாரும் இல்ல…
தலைவா தலைவா…

BGM

ஆண் : ராசாத்தி எனத்தொடத்தான்…
லேசாக விரல் படத்தான்…
ஆறாத காயம் எல்லாம் ஆறிப்போகுமே…

பெண் : ராசா உன் உடம்புலதான்…
பூங்காத்து ஒரசிடத்தான்…
பாத்தாலே ஏம்மனசு பதறிப் போகுமே…

ஆண் : சாமியுண்டு காவலுக்கு…
அச்சப்பட தேவயில்ல…

பெண் : மாமன் மேல ஈ எறும்பு…
மொச்சாலும்தான் தாங்கவில்ல…

ஆண் : கலையாத வாசம்…
நான் கொண்டாடும் நேசம்…

பெண் : நிலையான உறவென்று வரலாறு பேசும்…

பெண் : மன்னவனே மன்னவனே…
மாலையிட்ட தென்னவனே…
உன்னப்போல யாரும் இல்ல…
தலைவா தலைவா…

BGM

பெண் : தாயாக தவிச்சிருந்தேன்…
தவமான தவமிருந்தேன்…
தாலாட்டும் பாக்கியத்த தந்த மன்னவா…

ஆண் : நான்தான் உன் தலப்ரசவம்…
நலமாக தெனம் தெனமும்…
ஆத்தால வேண்டி வந்தேன் போதுமல்லவா…

பெண் : உன்னுடைய பாசத்துக்கு நன்றி சொல்ல…
வார்த்த இல்ல…

ஆண் : உன்ன இன்றி வாழ்வதற்க்கு…
மண்ணில் ஒரு வாழ்க்க இல்ல…

பெண் : உசுராகத்தானே நான் உறவாடுவேனே…
ஆண் : ஒருபோதும் இரு ஜீவன் பிரியாது மானே…

பெண் : மன்னவனே மன்னவனே…
மாலையிட்ட தென்னவனே…
உன்னப்போல யாரும் இல்ல…
தலைவா தலைவா…

பெண் : உன்ன நெனச்சித்தான் நான் நிதமும்தான்…
என் தலவாரி பூச்சூடினேன்…

ஆண் : ஒரு நாளும் பூவும் பொட்டும்…
வாடாது மானே…

பெண் : மன்னவனே மன்னவனே…
மாலையிட்ட தென்னவனே…
உன்னப்போல யாரும் இல்ல…
தலைவா தலைவா…


Notes : Mannavane Mannavane Song Lyrics in Tamil. This Song from Kottai Vaasal (1992). Song Lyrics penned by Kalidasan. மன்னவனே மன்னவனே பாடல் வரிகள்.


Scroll to Top