சிங்காரி சரக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாகாக்கிசட்டை (1985)

Singari Saraku Song Lyrics in Tamil


ஆண் : வாழைப்பழம் தோலுரிச்சி பானையில ஊறவச்சி…
வாணலியில் ராப்பகலா காச்சி இங்க வச்சிருக்கு…
பாத்தாலே தண்ணி வரும்… இஷ் அப்பா…
பாக்குறவன் நாக்குலதான்…
பாலாட்டும் அய்யோ தேனாட்டம்…
அய்யய்யய்யோ வாடைவரும் மூக்குலதான்…

—BGM—

ஆண் : நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு…
நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு…

ஆண் : நான் விட்டெறிஞ்சேன் சல்லிய…
அட ஊத்திக்கிட்டேன் மில்லிய…

ஆண் : நான் விட்டெறிஞ்சேன் சல்லிய…
ஊத்திக்கிட்டேன் மில்லிய…
குதிரை மேல ஏறி போய்…
வாங்க போறேன் டில்லியை…

ஆண் : நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு…

—BGM—

ஆண் : சாராயம் குடிச்சாக்கா அட சங்கீதம் தேனா வரும்…
ம்ம்ம்… ஆஹா ஆஆ ஆஆ… ஆஆ ஆஆ ஆஆ…

ஆண் : சாராயம் குடிச்சாக்கா…
அட சங்கீதம் தேனா வரும்…
சங்கீதம் தேனா வந்தா…
கூட இங்கிதம் தானா வரும்…

ஆண் : அட தவக்களை சத்தம் சகிக்கலை…
குட்டை குளத்துலே கத்தி பழகலே…

ஆண் : நம்மகிட்ட கத்துக்கோ…
வாத்தியாரா ஒத்துக்கோ…
எத்தனையோ வித்தையை வச்சிருக்கேன் பாத்துக்கோ…

ஆண் : உச்சந்தலை கீழுருக்க…
உள்ளங்கால் மேலிருக்க…
நிக்கட்டுமா நடக்கட்டுமா… ஹோயா…

ஆண் : நம்ம சிங்காரி சரக்கு சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு…

ஆண் : நான் விட்டெறிஞ்சேன் சல்லிய…
அட ஊத்திக்கிட்டேன் மில்லிய…

ஆண் : நான் விட்டெறிஞ்சேன் சல்லிய…
ஊத்திக்கிட்டேன் மில்லிய…
குதிரை மேல ஏறி போய்…
வாங்க போறேன் டில்லியை…

ஆண் : நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு…

—BGM—

ஆண் : முன்னாடி இருக்குதடா…
நம்ம மூக்காயி இட்லி கடை…
பின்னாலே ருசிக்குமடா…
இவ சூடான கீரவடை…

ஆண் : இது மணக்குது…
என்னை மயக்குது…
பசி எடுக்குது…
பக்கம் இழுக்குது…

ஆண் : புத்தம் புது ஆப்பமா…
தொட்டு கொஞ்சம் பாப்போமா…
தின்னுபுட்டு மொத்தமா…
துட்டு என்ன கேப்போமா…

ஆண் : சுட்ட கருவாடிருக்கு…
வாத்துமுட்டை வறுத்திருக்கு…
அடிக்கடி நான் கடிச்சிக்கதான்… ஹோயா…

ஆண் : நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது கிக்கு எனக்கு…

ஆண் : நான் விட்டெறிஞ்சேன் சல்லிய…
அட ஊத்திக்கிட்டேன் மில்லிய…

ஆண் : நான் விட்டெறிஞ்சேன் சல்லிய…
ஊத்திக்கிட்டேன் மில்லிய…
குதிரை மேல ஏறி போய்…
வாங்க போறேன் டில்லியை…

ஆண் : சிங்காரி சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது…
நம்ம சிங்காரி சரக்கு…
சும்மா கும்முன்னு ஏறுது…


Notes : Singari Saraku Song Lyrics in Tamil. This Song from Kakki Sattai (1985). Song Lyrics penned by Vaali. சிங்காரி சரக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading