கண்மணியே பேசு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ். பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிஇளையராஜாகாக்கிசட்டை (1985)

Kanmaniyae Pesu Song Lyrics in Tamil


BGM

ஆண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…
கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

ஆண் : கன்னங்கள் புது ரோசாப்பூ…
உன் கண்கள் இரு ஊதாப்பூ…
இது பூவில் பூத்த பூவையோ…

ஆண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : அந்தப்புறம் இந்தப்புறமோ விழி மையிட்டு…
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு…
அந்தப்புறம் இந்தப்புறமோ விழி மையிட்டு…
அந்திக்கலை சொல்லித் தருமோ இருகை தொட்டு…

பெண் : ஆயிரம் பொன் பூக்கும்…
எந்தன் தேகம் எங்குமே…
அங்குலம் விடாமல்…
இன்ப கங்கை பொங்குமே…

ஆண் : தோளிலும் என் மார்பிலும்…
கொஞ்சிடும் என் அஞ்சுகம்…
நான் நீ எது… ஹோய் ஹோய்…

பெண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

பெண் : கன்னங்கள் புது ரோசாப்பூ…
என் கண்கள் இரு ஊதாப்பூ…
இது பூவில் பூத்த பூவையே…

பெண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

BGM

பெண் : உன்னைக் கொடு என்னைத் தருவேன்…
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன்…
விழி மூடாமல்…

பெண் : உன்னைக் கொடு என்னைத் தருவேன்…
ஒரு தாலாட்டில் பிள்ளைத் தமிழ் சொல்லித் தருவேன்…
விழி மூடாமல்…

ஆண் : கண்களால் என் தேகம் எங்கும்…
காயம் செய்கிறாய்…
கைகளால் என் பாதம் நீவி…
ஆறச் செய்கிறாய்…

பெண் : வானகம் இவ்வையகம்…
யாவுமே என் கையகம்…
நீதான் தந்தாய்… ஹோ ஹோ…

ஆண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

பெண் : கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…

ஆண் : கன்னங்கள் புது ரோசாப்பூ…
உன் கண்கள் இரு ஊதாப்பூ…

பெண் : இது பூவில் பூத்த பூவையே…
கண்மணியே பேசு…
மௌனம் என்ன கூறு…


Notes : Kanmaniyae Pesu Song Lyrics in Tamil. This Song from Kakki Sattai (1985). Song Lyrics penned by Pulamaipithan. கண்மணியே பேசு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading