சத்தியமா சொல்லுரேன்டி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
முகின் ராவ்முகின் ராவ் & கே.சிவாங்கி கோபி சுந்தர்வேலன்

Sathiyama Sollurandi Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சத்தியமா நான் சொல்லுரேன்டி…
உன் பார்வை ஆள தூக்குதடி…

பெண் : பத்தியமா நானும் பாத்துக்கறேன்…
உனக்காக வாழ்கைய வாழ்ந்தபடி…

ஆண் : கிருக்கி உன் கிறுக்கல் எழுதுலதான்…
கிறுக்கா என்ன நீயும் மாத்திவச்ச…

பெண் : மனசில் இருக்கிற ஆசையத்தான்…
கிறுக்கா நான் உம்மேல கட்டிப்புட்டேன்…

ஆண் & பெண் : இரு மீன்கள் ஒரு ஓடையில்…
தண்ணீரில் தண்ணை இழக்க…
உன் காதல் என் காவியம்…
கையோடு நான் கை கோர்க்க…

ஆண் : என்ன மறந்தேன் என்ன மறந்தேன்…
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்…

ஆண் & பெண் : என்ன மறந்தேன் என்ன மறந்தேன்…
சத்தியமா நான் உன்னில் விழுந்தேன்…

ஆண் : நீதான் நீதான்…
நீத்தாண்டி எனக்குள்ள…
நான்தான் நான்தான்…
நான்தானே உன்புள்ள…

ஆண் & பெண் : என்புள்ள…

—BGM—

ஆண் : குழித்தான் உன் கண்ணத்துல விழுகுதடி…
நீ சிரிக்கையில…
வலிதான் என் நெஞ்சுக்குள்ள கதருமடி…
நீ அழுகயில…

ஆண் : அழகே நீ பொறந்தது அதிசயமா…
உலகம் உன் பாசத்தில் தெரியுதடி…
நிலவே என் வாழ்க்கையில் ஒளிமயமா…
காலராய் என் வாழ்வையும் மாற்றுதடி…

—BGM—

ஆண் : உலகமே சுழலுது…
காதல்தான் போதையா…

பெண் : ஒசர நீ பார்க்குற…
உசுர நீ தருவியா…

ஆண் : உள்ளுக்குள்ளத்தான் காதலத்தான்…
பதுக்கி வச்சேன் உன்னாலதான்…

பெண் : நீ குண்டுமுழியில் திருடிப்புட்டே…
என் காதலையும் இரு கண்ணாலதான்…

ஆண் : நீதான்…

பெண் : நீ தான்…

ஆண் : நீ தான்…
நீதாண்டி எனக்குள்ள…

பெண் : எனக்குள்ள…

ஆண் : நான்தான் நான்தான்…
நான்தானே உன்புள்ள என்புள்ள…
நான்தான் நான்தான்…
நான்தானே உன்புள்ள என்புள்ள…

ஆண் : சத்தியமா நான் சொல்லுரேன்டி…
உன் பார்வை ஆள தூக்குதடி…
பத்தியாமா நானும் பாத்துக்கறேன்…
உனக்காக வாழ்கைய வாழ்ந்தபடி…

—BGM—


Notes : Sathiyama Sollurandi Song Lyrics in Tamil. This Song from Velan (2021). Song Lyrics penned by Mugen Rao. சத்தியமா சொல்லுரேன்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading