என்னை ஆளும் பெண்ணிலாவே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
உமா தேவிபிரதீப் குமார் & பிரியங்கா என் கேகோபி சுந்தர்வேலன்

Ennai Aalum Pennilave Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னை ஆளும் பெண்ணிலாவே…
உனது வானம் நானே…
உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு…
ஒன்றும் இல்லை வா வா…

ஆண் : இரவை நனைக்கும் பனியே…
பகலைத் திறக்கும் கதிரே…
விழியைத் தாண்டும் அழுகை போதும்…
நமது பாலை வசந்தம் ஆகும்…
வாழ்வே வா வா…

ஆண் : அன்னை தேடும் பிள்ளை போல நானும் உன்னை தேட…
அன்பின் காட்டில் காதல் ஊற்றில் நாளும் மூழ்கி போக…
உணர்வில் கலந்தாய் உயிரே…
உனை நான் பிரியேன் இனியே…

—BGM—

ஆண் : அலை கடல் சேர்க்கும் குளிர் மணல் போல…
உன்னை ஏந்திக் கொள்ள ஏங்கும் காதல்…
உனக்கென நானும் எனக்கென நீயும்…
பிறந்த பிறகு பிரிதல் என்பதேது…

ஆண் : இரவை நனைக்கும் பனியே…
பகலைத் திறக்கும் கதிரே…
விழியின் ஈரம் தொலைந்து போகும்…
நமது பாலை வசந்தம் ஆகும்…
வாழ்வே வா வா…

—BGM—

பெண் : அன்னை தேடும் பிள்ளை போல நானும் உன்னை தேடி…
உன்னைத் தாண்டி எந்தன் வாழ்வு ஒன்றும் இல்லை வாழா…
உணர்வில் கலந்தாய் உயிரே…
உனை நான் பிரியேன் இனியே…

ஆண் : விழியைத் தாண்டும் அழுகை போதும்…
நமது பாலை வசந்தம் ஆகும்…
வாழ்வே வா வா…


Notes : Ennai Aalum Pennilave Song Lyrics in Tamil. This Song from Velan (2021). Song Lyrics penned by Yugabharathi. என்னை ஆளும் பெண்ணிலாவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading