சரியா தப்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிதேவாதேவாநெஞ்சினிலே

Sariya Thappa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா…
நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா…
எனக்கு புரியலயப்பா…

—BGM—

ஆண் : கருவறை முதல் கல்லறை வரைக்கும்…

—BGM—

ஆண் : கருவறை முதல் கல்லறை வரைக்கும்…
சில்லறை வேண்டும் ஸ்நேகிதா…

—BGM—

ஆண் : கருவறை முதல் கல்லறை வரைக்கும்…
சில்லறை வேண்டும் ஸ்நேகிதா…
கடவுளை கூட பார்க்கணும்னா…
காசு வேண்டும் ஸ்நேகிதா…

ஆண் : சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா…
நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா…
எனக்கு புரியலயப்பா…

—BGM—

ஆண் : பணம்தான் இல்லையின்னா பாசம் உனக்கு கிடைக்காது…
காசுதான் இல்லையின்னா காதல் கூட இனிக்காது…

—BGM—

ஆண் : பெத்த தாயிடத்தில் பட்ட கடன் ஏராளம்…
ஏதோ முடிஞ்சவரை அடைச்சிடுவேன் எந்நாளும்…
என்னையே நம்பி குடும்பம் அங்கே காத்திருக்குதடா…
அது வெளிச்சம் பெற உருகுகிறேன் நான் மெழுகுவர்த்தியடா…

ஆண் : ஆக மொத்தம் எதுவும் எனது குற்றம் இல்லையடா…
அட நிமிர்ந்து பாரு நிலவுகூட சுத்தம் இல்லையடா…

ஆண் : சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா…
நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா…
எனக்கு புரியலயப்பா…

—BGM—

ஆண் : குடிக்கும் வேளையில்தான் மனசாட்சி முழிக்குதடா…
குற்றம் குறைய சொல்லி மனுஷனத்தான் பழிக்குதடா…

—BGM—

ஆண் : மற்றவர்க்கு தெரியாது என்னோட ஆதங்கம்…
அட நான் இருபக்கம் அடிவாங்கும் மிருதங்கம்…
இப்படியான்னு அப்படியான்னு சொல்ல முடியல…
அத சொல்லிடாம எனக்குள்ளாற மெல்ல முடியல…

ஆண் : என்ன பத்தி கண்ணன் கிட்டே கேட்டு பார்த்தேன்டா…
நீ கவலையை விடு கடமையை செய் என்று சொன்னான்டா…

ஆண் : சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா…
நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா…
எனக்கு புரியலயப்பா…

ஆண் : கருவறை முதல் கல்லறை வரைக்கும்…
சில்லறை வேண்டும் ஸ்நேகிதா…
கடவுளை கூட பார்க்கணும்னா…
காசு வேண்டும் ஸ்நேகிதா…

ஆண் : சரியா தப்பா செய்யுறது சரியா தப்பா…
நல்லது எது கெட்டது எதுனு தெரியலயப்பா…
எனக்கு புரியலயப்பா…

—BGM—


Notes : Sariya Thappa Song Lyrics in Tamil. This Song from Nenjinile (1999). Song Lyrics penned by Vaali. சரியா தப்பா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading