நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கண்ணதாசன்பி.பி. ஸ்ரீனிவாஸ்எம்.எஸ்.விஸ்வநாதன் & டி.கே.ராமமூர்த்திநெஞ்சில் ஒரு ஆலயம்

Ninaipathellam Nadanthuvittal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…
தெய்வம் ஏதுமில்லை…
நடந்ததையே நினைத்திருந்தால்…
அமைதி என்றுமில்லை…

ஆண் : நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…
தெய்வம் ஏதுமில்லை…
நடந்ததையே நினைத்திருந்தால்…
அமைதி என்றுமில்லை…

ஆண் : முடிந்த கதை தொடர்வதில்லை…
இறைவன் ஏட்டினிலே…
தொடர்ந்த கதை முடிவதில்லை…
மனிதன் வீட்டினிலே…

ஆண் : நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…
தெய்வம் ஏதுமில்லை…
நடந்ததையே நினைத்திருந்தால்…
அமைதி என்றுமில்லை…

—BGM—

ஆண் : ஆயிரம் வாசல் இதயம்…
அதில் ஆயிரம் எண்ணங்கள் உதயம்…
யாரோ வருவார் யாரோ இருப்பார்…
வருவதும் போவதும் தெரியாது…

ஆண் : ஒருவர் மட்டும் குடியிருந்தால்…
துன்பம் ஏதுமில்லை…
ஒன்றிருக்க ஒன்று வந்தால்…
என்றும் அமைதியில்லை…

ஆண் : நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்…
தெய்வம் ஏதுமில்லை…
நடந்ததையே நினைத்திருந்தால்…
அமைதி என்றுமில்லை…

—BGM—

ஆண் : எங்கே வாழ்க்கை தொடங்கும்…
அது எங்கே எவ்விதம் முடியும்…
இதுதான் பாதை இது தான் பயணம்…
என்பது யாருக்கும் தெரியாது…

ஆண் : பாதை எல்லாம் மாறி வரும்…
பயணம் முடிந்துவிடும்…
மாறுவதை புரிந்துகொண்டால்…
மயக்கம் தெளிந்துவிடும்…

ஆண் : நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்…
தெய்வம் ஏதுமில்லை…
நடந்ததையே நினைத்திருந்தால்…
அமைதி என்றுமில்லை…


Notes : Ninaipathellam Nadanthuvittal Song Lyrics in Tamil. This Song from Nenjil Ore Alayam (1962). Song Lyrics penned by Kannadasan. நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading