சங்கீத ஸ்வரங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம் & சந்தியாமரகதமணிஅழகன்

Sangeetha Swarangal Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா…
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்…

பெண் : என் வீட்டில் இரவு அங்கே இரவா…
இல்ல பகலா எனக்கும் மயக்கம்…

ஆண் : நெஞ்சில் என்னவோ நெனைச்சேன்…
பெண் : நானும்தான் நெனைச்சேன்…
ஆண் : ஞாபகம் வரல…
பெண் : யோசிச்சா தெரியும்…

ஆண் : யோசனை வரல…
பெண் : தூங்கினா வெளங்கும்…
ஆண் : தூக்கம்தான் வரல…
பெண் : பாடுறேன் மெதுவா உறங்கு…

ஆண் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா…
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்…

பெண் : என் வீட்டில் இரவு அங்கே இரவா…
இல்ல பகலா எனக்கும் மயக்கம்…

—BGM—

ஆண் : எந்தெந்த இடங்கள் தொட்டால் ஸ்வரங்கள்…
துள்ளும் சுகங்கள் கொஞ்சம் நீ சொல்லித்தா…

பெண் : சொர்க்கதில் இருந்து யாரோ எழுதும்…
காதல் கடிதம் இன்றுதான் வந்தது…

ஆண் : சொர்க்கம் விண்ணிலே திறக்க…
பெண் : நாயகன் ஒருவன்…
ஆண் : நாயகி ஒருத்தி…
பெண் : தேன் மழை பொழிய…

ஆண் : பூவுடல் நனைய…
பெண் : காமனின் சபையில்…
ஆண் : காதலின் சுவையில்…
பெண் : பாடிடும் கவிதை சுகம்தான்…

பெண் : சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா…
இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்…

ஆண் : என் வீட்டில் இரவு அங்கே இரவா…
இல்ல பகலா எனக்கும் மயக்கம்…

—BGM—


Notes : Sangeetha Swarangal Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. சங்கீத ஸ்வரங்கள் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading