சாதிமல்லிப் பூச்சரமே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
புலமைப்பித்தன்எஸ்.பி. பாலசுப்ரமணியம்மரகதமணிஅழகன்

Sathimalli Poocharame Song Lyrics in Tamil


BGM

ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…

BGM

ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…
சங்கத்தமிழ் பாச்சரமே…
ஆசை என்ன ஆசையடி…
அவ்வளவு ஆசையடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : என்னென்ன முன்னே வந்து…
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ…
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்…
கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று…
பின்பு கட்டிலில் தாலாட்டு…

ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…
சங்கத்தமிழ் பாச்சரமே…
ஆசை என்ன ஆசையடி…
அவ்வளவு ஆசையடி…

BGM

ஆண் : எனது வீடு எனது வாழ்வு…
என்று வாழ்வது வாழ்க்கையா…
இருக்கும் நாலு சுவருக்குள்ளே…
வாழ நீ ஒரு கைதியா…

ஆண் : தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான்…
தாயைக் காப்பதும் நாட்டை காப்பதும் ஒன்றுதான்…

ஆண் : கடுகு போல் உன் மனம் இருக்கக்கூடாது…
கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்…
உன்னை போல் எல்லோருமென எண்ணோணும்…
அதில் இன்பத்தைத் தேடோணும்…

ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…
சங்கத்தமிழ் பாச்சரமே…
ஆசை என்ன ஆசையடி…
அவ்வளவு ஆசையடி…

BGM

ஆண் : உலகமெல்லாம் உண்ணும்போது…
நாமும் சாப்பிட எண்ணுவோம்…
உலகமெல்லாம் சிரிக்கும்போது…
நாமும் புன்னகை சிந்துவோம்…

ஆண் : யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி…
பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி…
யாதும் ஊரென யாரு சொன்னது சொல்லடி…
பாடும் நம் தமிழ்ப் பாட்டன் சொன்னது கண்மணி…

ஆண் : படிக்கத்தான் பாடலா நெனச்சுப் பாத்தோமா…
படிச்சத நெனச்சு நாம் நடக்கதான்…
கேட்டுக்கோ ராசாத்தி…
தமிழ் நாடாச்சு இந்த நாட்டுக்கு நாமாச்சு…

ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…
சங்கத்தமிழ் பாச்சரமே…
ஆசை என்ன ஆசையடி…
அவ்வளவு ஆசையடி…

ஆண் : என்னென்ன முன்னே வந்து…
கண்ணே நீ கொஞ்சம் கேட்டுக்கோ…
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம்…
கன்னித்தமிழ் தொண்டாற்று அதை முன்னேற்று…
பின்பு கட்டிலில் தாலாட்டு…

ஆண் : சாதிமல்லிப் பூச்சரமே…
சங்கத்தமிழ் பாச்சரமே…
ஆசை என்ன ஆசையடி…
அவ்வளவு ஆசையடி…


Notes : Sathimalli Poocharame Song Lyrics in Tamil. This Song from Azhagan (1991). Song Lyrics penned by Pulamaipithan. சாதிமல்லிப் பூச்சரமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading