மகராஜனோடு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிபி. உன்னிகிருஷ்ணன் & கே.எஸ். சித்ராஇளையராஜாசதி லீலாவதி

Maharajanodu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மகராஜனோடு ராணி வந்து சேரும்…
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்…

பெண் : மகராஜனோடு ராணி வந்து சேரும்…
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்…

ஆண் : இது மன்மத சாம்ராஜ்யம்…
புது மங்கல சௌபாக்யம்…
ஒரு போதும் குறையாது…
தினம் கூடும் கூடும் ஆனந்தம்…

ஆண் : ராஜனோடு ராணி வந்து சேரும்…
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்…

—BGM—

பெண் : கங்கைக்கொரு வங்கக் கடல் போல் வந்தான்…
அவன் வந்தான்…
மங்கைக்கொரு இன்பக் கனா அவன் தந்தான்…
அவன் தந்தான்…

—BGM—

ஆண் : கண்ணில் என்ன வண்ணங்கள்…
சின்னச் சின்ன மின்னல்கள்…

—BGM—

ஆண் : கண்ணில் என்ன வண்ணங்கள்…
சின்னச் சின்ன மின்னல்கள்…
ஓர் காதல் பூத்ததோ…

பெண் : தக்கத் துணை வாய்க்காமல்…
பெண் வாடினாளோ…

ஆண் : பக்கம் வந்து கை சேர பண் பாடினாளோ…

பெண் : ஒரு ராகம் ஒரு தாளம்…
இணை கூடும் போது கானம்தான்…

பெண் : ராஜனோடு ராணி வந்து சேரும்…
ஆண் : இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்…

ஆண் : இது மன்மத சாம்ராஜ்யம்…
புது மங்கல சௌபாக்யம்…
ஒரு போதும் குறையாது…
தினம் கூடும் கூடும் ஆனந்தம்…

ஆண் : ராஜனோடு ராணி வந்து சேரும்…
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்…

—BGM—

ஆண் : மன்னன் தொட தன்னைத் தந்தாள்…
பூம்பாவை பூம்பாவை…
என்னென்னவோ நெஞ்சில் கொண்டாள்…
பேராசை பேராசை…

—BGM—

பெண் : சந்திக்கின்ற சந்தர்ப்பம்…
சின்னப் பெண்ணின் விண்ணப்பம்…

—BGM—

பெண் : சந்திக்கின்ற சந்தர்ப்பம்…
சின்னப் பெண்ணின் விண்ணப்பம்…
நீ கேட்க வேண்டுமோ…

ஆண் : இலக்கணம் பார்க்காது ஓர் பாடல் கூற…
பெண் : இடைவெளி தோன்றாது ஓர் ஜோடி சேர…

ஆண் : என்ன வேகம் என்ன தாகம்…
ஒரு காவல் தாண்டக் கூடுமோ…

ஆண் : ராஜனோடு ராணி வந்து சேரும்…
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்…

ஆண் & பெண் : இது மன்மத சாம்ராஜ்யம்…
புது மங்கல சௌபாக்யம்…
ஒரு போதும் குறையாது…
தினம் கூடும் கூடும் ஆனந்தம்…

பெண் : ராஜனோடு ராணி வந்து சேரும்…
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்…
மகராஜனோடு ராணி வந்து சேரும்…
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்…


Notes : Maharajanodu Song Lyrics in Tamil. This Song from Sathi Leelavathi (1995). Song Lyrics penned by Vaali. மகராஜனோடு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading